புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 23, 2022)

மறைந்திருக்கிறவைகள் வெளிப்படும் நாள்

1 கொரிந்தியர் 4:5

இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளி யரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்;


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மிகவும் வயதான மனிதனொருவர், சிறிய வீடொன்றிலே எளிமையானதொரு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவரு டைய வயதுக்கொத்த மனிதர்கள் யாவருமே மரித்துப் போய்விட்டார்கள். அந்த மனிதரின் வீட்டை கடந்து செல்லும் வாலிபர்களில் சிலர் அவ ரைக் கண்டு கேலி செய்வது வழக்கமாக இருந்தது. சில ஆண்டுகளு க்கு பின்னர், அந்த மனிதனானவர் மரி த்துப் போய் விட்டார். அவருடைய அட க்க ஆராதனைக்கு வெளியூரிலிருந்து பலர் வருகை தந்திருந்தார்கள். அவர்க ளில் அநேகர் பெரியவர்களும் அதிகாரி களுமாயிருந்தார்கள். அடக்க ஆராத னை யின் போது, வருகை தந்த அந்த மனிதர்கள், அந்த வயதானவர் அந்த ஊரின் அபிவிருத்திக்கும், அதிலுள்ள ஜனங்களுக்கும் செய்த அளவற்ற நற்கி ரியைகைளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த ஊரிலுள்ள அநேக மனிதர்களுக்கு அவை ஆச்சரியமாயிருந்தது. இந்த மனுஷன் இவ்வளவு பெரியவரா? எவ்வளவாய் நன்மைகளைச் செய்திருக்கின்றார் என்று சொல்லிக் கொண்டார்கள். இப்படியாக மறைந்திருந்த அந்த வய தானவருடைய நற்கிரியைகளை அறியாது வாழ்ந்து வந்த அந்த ஊர் மக்கள் அவரைப் பற்றி அறிந்து கொண்டார்கள். இவ்வண்ணமாகவே, வேறு சில உலக பிரபல்யமான மனிதர்களின் வாழ்க்கையின் உண் மையை பற்றி அறிந்து கொள்ளும் போது, 'இவன் எவ்வளவு நல்லவன் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன், ஆனால் இப்போதுதான் இவ னுடைய மாய்மாலமான வாழ்க்கை பற்றி எங்களுக்கு தெரிகின்றது' என் றும் கூறிக் கொள்கின்றார்கள். பிரியமானவர்களே, ஒருவரும் அறி யாத வாழ்க்கையின் கிரியைகள் யாவும் வெளிப்படுத்தப்படும் நாள் ஒன்று உண்டு. ஆண்டவராகிய இயேசுதாமே, இருளில் மறைந்திருக்கிறவை களை வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளி ப்படுத்துவார்;. அந்த நாளிலே அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண் டாகும். எனவே ஆண்டவராகிய இயேசுவின் நாமத்திலே, சோர்ந்து போகாமல் நற்கிரியைகளை நடப்பியுங்கள். மனிதர்களுடைய அங்கீகா ரம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள். மனிதர்களு டைய கிரியைகளும், அவர்களுடைய மனதின் யோசனைகளும்; வெளி ப்படுத்தப்படும் நாள் நெருங்கிக் கொண்டிருந்கின்றது. எனவே, தேவ பயமுள்ளவர்களாக, தேவ வசனத்தைப் பிடித்துக் கொண்டு, தாழ்மை யுள்ள இருதயத்தோடு நற்கிரியைகளை செய்வோமாக.

ஜெபம்:

வெளியரங்கமாய்ப் பலனளிக்கும் தேவனேஇ மனிதர்களுடைய அங்கீகாரத்தை நாடாமல்இ வாழ் நாட்களில் பொறுமையோடும் மனத் தாழ்மையோடும் நற் கிரியைகளை செய்து முடிக்க பெலன் தந்து வழிநடத்துவீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:1-5