புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 22, 2022)

அழைப்பை அறிந்து செயற்படுங்கள்

1 கொரிந்தியர் 4:5

கர்த்தர் வருமளவும் நீங் கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்;


கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எனவனோ அவன் தீர்க்காயுசும் நரைமயிருடையவனுமாய் வாழ்ந்து பிள்ளைகளையும் பிள் ளைகளின் பிள்ளைகளையும காண்பான் என்ற ஆசீர்வாதத்தை பெற்றிருக்கின்றான் இது உண்மையான வாக்குத்தத்தம். அப்படியானால், கர் த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ண வந்த யோவான்ஸ்நான் என்னும் தேவ மனுஷனுடைய வாழ்நாட்களும், ஊழியத்தின் வருடத்தின் எண்ணிக்கையும் குறுகியது. தன்னுடைய இள மைக் காலத்திலே அவன் ஏரோது ராஜா வினால் சிரைச்சேதம் செய்யப்பட்டான். அதனால் யோவானஸ்நானன் தேவனால் ஆசீர்வதிக்கப்படாதவன் என்று கூறமுடியுமோ? இல்லை, ஸ்திரிகளி டத்தில் பிறந்தவர்களில் யோவாஸ்நானனைவிட மேலானவர்கள் ஒருவருமில்லை என்று ஆண்டவராகிய இயேசு யோவான்ஸநானனைக் குறித்து கூறியிருக்கின்றார். எனவே, தேவ நீதியையும், அவருடைய நியாயத்தீர்ப்பையும் குறித்து ஆராய்ந்து தியானித்துக் கொண்டிருக்கும் நாம், நம்முடைய அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் குறித்து ஜாக்கிரரையுள்ளவர்களாக இருக்க வேண்டும். உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவி ன்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும். நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிர மாணத் துக்கேற்றதாகச் சொல்லக்கடவன். ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும், புத்திசொல்லுகிறவன் புத்தி சொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்;. பகிர்ந்து கொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்;. முதலாளியானவன் ஜாக்கிரதை யாயிருக்கக்கடவன்;. இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன். (ரோமர் 12:3-8) இவையொன்றிலும் மற்றவர்களை நியாந்தீர்ப்பது நமக்குரியதல்ல என்பதை திட்டமாக நம் மனதில் கொண்டிருக்க வேண்டும். தேவனொருவரே சகலத்தையும் அறிந்தவர். ஆனதால், கர்த் தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத் துவார்; (1 கொரி 4:5). அந்நாள் வரைக்கும் நீங்கள் உங்கள் அழைப்பின் நோக்கத்தை நிறைவேற்றுங்கள். கர்த்தரே யாவருக்கும் நியாயாதிபதி.

ஜெபம்:

எல்லாவற்றையும் அறிந்த தேவனே, உம்முடைய நேரத்திற்கு முன்னதாக நான் எதைக் குறித்தும் தீர்ப்பு செய்யாதபடிக்கு, நீர் என்னை அழைத்த நோக்கத்தை நிறைவேற்ற கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 2:1-6