புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 21, 2022)

நியாத்தீர்ப்பா? சிட்சையா?

எபிரெயர் 12:11

எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.


சில நாட்களாக தன்னுடைய மகனானவனுடைய வித்தியாசமான போக் குகள் கவனித்து வந்த அவனுடைய தகப்பனானவர், ஒரு சில தடவை கள் அவனை அழைத்து அவனோடு பேசி, அவனுக்கு ஆலோசனைக ளைச் சொல்லி வந்தார். ஆனாலும் அவன் தன் தகப்பனானவருடைய ஆலோசனைகளையும் எச்சரிப்புக்களையும் கேளாது போன போது, தன் மகனை உண்மையாக நேசித்து வந்த அவனுடைய தகப்பனானவர், அவ னைக் கண்டித்து, தண்டித்து, அவன் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய சில ஒழுங்கு முறைகளை அவனுக்கு கட்டளையாக விதித்திருந்தார். இதைக் கேள்விப்பட்ட அவனுடைய உறவின ர்களில் சிலர், அவனுடைய அசட்டைத் தனத்திற்கு இது நல்லதொருபாடம் என் றார்கள். அவனுடைய சகோதரரில் ஒருவன், இவனுக்கு எப்போது இது நடக்கும் என்று காத்திருந்தேன், நல்ல தண்டனை கிடைத்தது என்றான். அவனுடைய அயலவர்களில் சிலர் வினை விதைத்தான் வினை அறுத்தான் என்று கூறிக் கொண்டார்கள். இப்படியாக பலர் பலவிதமாக தங்கள் அபிப்பிராயங்களையும் தங்கள் உணர்வுகளையும்; வெளிப்படுத்தினார்கள். பிரியமானவர்களே, இந்த சம் பவத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள். தன் மகனை நேசித்த தகப்பனா னவர் அவனுக்கு நியாயத்தீர்ப்புச் செய்தாரா? இல்லை! மகனானவன் கேட்டின் வழியிலே சென்று நியாயத்தீர்ப்பை அடைந்து கொள்ளாதபடி க்கு, அவன் தன் வழியை சீர்திருத்தும்படிக்கு அவனை சிட்சித்தார். 'அவன் இப்படி செய்தால் அவனுக்கு அப்படி நடந்துது. தேவன் அவனுக்கு நல்ல அடியை கொடுத்தார்.' எல்லாவற்றையும் அறிந்தவர்களைப் போல, மற்றவர்களுடைய வாழ்க்கையிலே போராட்டங்களும், துன்பங்களும், நோய்களும், உபத்திரவங்களும் ஏற்படும்போது, அது எதற்காக நடந்தது என்று நாம் விளக்கம் கூறுவது நம்முடைய வேலையல்ல. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த் துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார். இந்த உலகத்திலுள்ள தகப்பன்மார் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சிக்கிறார்கள், நம்முடைய தேவனாகிய கர்த்தரோ, தம்முடைய பிள்ளைகள் பரிசுத்தத்துக்கு பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்மு டைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.

ஜெபம்:

என்னை நேசிக்கின்ற பரலோக தந்தையே, நீர் என்னை கடிந்து கொள்ளும்போது, மற்றவர்களுடைய பேச்சுக்களால் நான் சோர்ந்து போகாமல், உம்மையே அண்டிக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 103:13