புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 20, 2022)

எல்லார்மேலும் தயவுள்ளவர்

சங்கீதம் 145:9

கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது.


கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசியாகிய நாத்தானைத் தாவீது ராஜாவி னிடத்தில் அனுப்பினார். தீர்க்கதரிசி ராஜாவை நோக்கி: ஒரு பட்டண த்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள், ஒருவன் ஐசுவரியவான், மற்ற வன் தரித்திரன். ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந் தது. தரித்திரனுக்கோ தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்கு ட்டியைத்தவிர வேறொன்றும் இல்லா திருந்தது. அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர் ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடி த்து, அவன் மடியிலே படுத்துக் கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப் போல இருந்தது. அந்த ஐசுவரிய வானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான்; அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்குச் சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடு மாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்தத் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைத் தன்னிடத்தில் வந்த மனுஷனுக்குச் சமையல்பண்ணுவித்தான் என்றான். அப்பொழுது தாவீது ராஜா: இந்தக் காரியத்தை செய்த மனுஷன்மேல் மிகவும் கோபமூண்டவனாகி, நாத்தா னைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப் பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். அவன் இரக்கமற்றவனாயிருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியி னால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவே ண்டும் என்றான். அப்பொழுது நாத்தான் தாவீது ராஜாவை நோக்கி: நீயே அந்த மனுஷன்;. கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந் தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண் ணினது என்ன? என்றான். இந்த பொல்லாப்பு செய்தவன் மரணத்திற்கு பாத்திரன் என்று கூறிய தாவீது ராஜாவோ, அதை செய்தது தான் என்று அறிந்த போது, அவர் தேவனுடைய இரக்கத்தை வேண்டி நின்றார். தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும் என்று கூறினார். எங்களுக்கு மட்டுமல்ல, தங்களைத் தாழ்த்தி தம்மை நோக்கி பார்க்கின்ற யாவர்மேலும் கர்த்தர் தயவுள்ளவராயிருக்கின்றார் என்பதை மறந்து போய்விடாதிருங்கள்.

ஜெபம்:

தயவுள்ள தேவனே, எனக்கு ஒரு நீதி, அயலவனுக்கு இன்னுமொரு நீதி என்ற எண்ணத்துடன் நான் வாழாமல், உம்முடைய தயவானது எல்லார்மேலும் உள்ளது என்பதை உணர்ந்தவனாக வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - தானியேல் 3:12-18