புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 19, 2022)

பட்சபாதமற்ற தேவ இரக்கம்

ரோமர் 2:11

தேவனிடத்தில் பட்சபாதமில்லை.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த வாலிபனொருவனை, அந்த ஊரிலுள்ள வலிமையான இரண்டு மனிதர்கள் அடித்து காயப்படுத்தி விட்டார்கள். இந்த விபரீதத்தை குறித்து அந்த வாலிபனுடைய பெற்றோர் அந்த ஊரை நியாயம் விசாரித்து வந்த மூப்பர் சங்கத்திற்கு அறிவித்தார்கள். மூப்பர் சங்கம் கூடி வந்தபோது, அந்த ஊர் மக்கள் முன்னிலையிலே, அந்த வாலிபனுடைய தாயானவள் நின்று, கூக்குரலிட்டு, பாருங்கள் என் மகனுடைய கோலத்தை, இவ்வள வாய் அந்த கொடிய மனிதர்கள் இவ னை அடித்து காயப்படுத்தியிருக்கின்றார்களே. மூப்பர்களே, இந்த ஊர் மக்களே நீங்கள் நீதி செய்ய வேண்டும் என்றாள். அதற்கு அந்த மூப்பர் சங்கத்தின் அதிகாரி, உன் மகனை அடித்தவர்களுக்கு என்ன செய்ய ப்பட வேண்டும் என்று கேட்டார். அதற்கு அந்த தாயானவள்: அவர்கள் இருவருக்கும் மிகவும் கடுமையான தண்டனையை பொதுமக்கள் முன் னிலையில் கொடுக்க வேண்டும். என் மகனுக்கு அவர்கள் நஷ;டஈடு செலுத்த வேண்டும் என்று கூறினாள். அந்த வேளையிலே, அந்த மூப் பர் சங்கத்தினர், ஒரு இளம் பெண்ணொருத்தியை சங்கத்தின் முன்னி லையிலே கொண்டு வந்து, அந்த தாயானவளை நோக்கி: உன்னுடைய மகனும், அவனுடைய நண்பர்களுமாக சேர்ந்து, இந்தப் பெண்ணுக்கு பெருந்துரோகத்தை செய்து, இவளை குற்றுயிராய் விட்டுவிட்டு சென்றிரு க்கின்றார்கள். இதற்கு எங்கள் மத்தியில் அநேக சாட்சிகள் உண்டு. உன் மகனுக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீ கூறுகின்றாய் என்று கேட்டார்கள். அதிர்ச்சி யில் பேச்சிழந்து போன அந்தத் தாயான வள் பதைபதைத்து, என் மகன் மேல் கருணை காண்பியுங்கள் என்று இரந்து வேண்டிக் கொள்ளத் தொடங்கினாள். பிரியமானவர்களே, பொது வாக இதுவே மனிதர்களுடைய மனநிலையாக இருக்கின்றது. அதா வது, தாங்கள் அல்லது தங் ளுக்கு அன்பானவர்கள் குற்றம் செய்தால் தங்களுக்கு இரக்கமும் மன்னிப்பும் தேவை என்பதும் ஆனால் மற்றவ ர்கள் தங்களுக்கெதிராக குற்றம் செய்தால் உடனடியாக நியாயம் விசா ரிக்கப்பட்டு, தகுந்த தண்டனையை மற்றவர்களுக்கு கொடுக்கபட வேண் டும் என்ற மனநிலை உடையவர்களாக இருக்கின்றார்கள். இது மனிதர் களுடைய தன்நலம் நிறைந்த சுயநீதி. தேவனுடைய சமுகத்திற்கு செல் லும் போது, அவர் நம்மு டைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் தண் டனை வழங்காமலும், அக்கிரமங்களுக்கு தக்கதாக நியாயத்தீர்பு செய் யாமலும் நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராக இருப்பது போல, மற்ற வர்கள் மேலும் அப்ப டியே தம்முடைய இரக்கத்தை காண்பிக்கின்றார். அவரிடத்தில் பட்சபாதமில்லை.

ஜெபம்:

பட்சபாதமற்ற தேவனே, நான் நிர்மூலமாகதிருப்பது உம்முடைய சுத்த கிருபை. என் பாவங்களின் நிமித்தம் எனக்கு நீதியை சரிக்கட்டாமல், என்மேல் உம்முடைய கிருபையை பொழிகின்றதற்காய் நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கொலோ 3:25

Category Tags: