புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 18, 2022)

நியாயத்தீர்ப்பின் நாள்

யோவான் 5:22

நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.


கடவுளுக்கு கண் இல்லையா? இத்தனை அக்கிரமங்களை பார்த்துக் கொண்டிருக்கின்றாரா? தேவ நீதி வெளிப்பட வேண்டும் என்று ஒரு சாரார் கூறிக் கொள்கின்றார்கள். அதே சமயத்திலே, ஆண்டவர் இயேசு கூறிய வார்த்தைகளின்படி தங்கள் வாழ்க்கையை வாழாதவர்கள், ஆண் டவர் இயேசு அன்புள்ளவர் எனவே தங்கள் அக்கிரமங்களின் நிமித்தம் அவர் தங்களை நியாந்தீர்க்க மாட்டார் என்று கூறிக் கொள்கின்றார்கள். இப்படியாக மனிதர்கள் தேவனுடைய நியாயத்தீர்பைக் குறித்து தங்கள் தங் கள் அபிப்பிராயங்களை கூறிக் கொள் கின்றார்கள். என்றென்றுமாய் இருக்கி ன்றர் தேவனாகிய கர்த்தர்தாமே, ஒரு புகையைப் போல தோன்றி மறைந்து போகின்ற மனிதர்களுடைய அபிப்பி ரயாங்களின்படி கிரிiயைகளை நடப் பிக்கின்றவர் அல்ல. மனிதர்களுடைய நீதியானது தேவனுடைய பார்வையிலே அழுக்கான கந்தையாக இருக் கின்றது. தேவனை நோக்கிப் பார்க்கின்றவன், அவருடைய கிருபையை வேண்டிக் கொள்ள வேண்டும். ஏனெனில் தேவ நீதியானது வெளிப்ப ட்டால், மனிதர்களில் ஒருவன் தப்பிப் போவதில்லை. அதனால் அவர் ஆண்டவர் இயேசு வழியாக தம்முடைய கிருபையை, அவரை அறி ந் தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் பொழிகின்றார். பிதாவானவர் தீயோர்மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய் யப்பண்ணுகிறார். ஏனெனில் நாம் தேவனுடைய கிருபையின் காலத்தில் வாழ்கின்றோம். துன்மார்க்கனும், உலக போக்கின்படி சன்மார்க்கனும் அழிந்து போகாமலும், நீதிமான் விழுந்து போகாமலும், நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதற்காகவே தேவனாகிய கர்த்தர் நீடிய பொறு மையுள்ளவராக இருக்கின்றார். அதனால், தேவனுடைய நியாயத்தீர்ப்பு இல்லை என்பது பொருள் அல்ல. நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்கும் நாள் உண்டு. (ரோமர் 14:10). ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமை க்காவது, தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். (2 கொரி 5:10). நீதியுள்ள நியாயதிபதியாகிய ஆண்டவர் இயேசுவின் சிங்காசனத்திற்கு முன்பாக நாம் நிற்கும் நாட்கள் நெருங்கிக் கொண்டிருப்பதால், தேவ சித்தம் நம்மில் நிறைவேற இடங் கொடுப்போமாக.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர் என்ற சத்தியத்தை உணர்ந்து வாழும்படி எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 8:28