புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 17, 2022)

ஆச்சரியப்படும் நாள்

மத்தேயு 25:34

வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே


அன்றியும் ஆண்டவராகிய இயேசு தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்ம றியாடுகளையும் வெள்ளாடுகளையும் வௌ;வேறாக பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரித்து, செம்மறி யாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத் திலும் நிறுத்துவார். அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்ப வர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர் களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ண ப்பட்டி ருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்றும் இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்த ம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள் என்று கூறு வார். (மத்தேயு 25:35-46). ஆண்டவராகிய இயேசுதாமே, வலப்பக்க த்தில் நிற்பவர்கள் செய்த நற்கிரியைகளை கூறிய போது அவர்கள் அதை நாம் எப்போது செய்தோம் என்று ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் இடபக்கத்தில் நிற்பவர்கள், தாங்கள் செய்யாத நற்கிரியைகளை குறித்து ஆண்டவர் இயேசு கூறிய போது, நாம் அவைகளை எப்போது செய்யாது போனோம் என்று ஆச்சரியப்பட்டார்கள். மனிதர்கள் இந்த உலகிலே வாழும் போது, தங்கள் வாழ்க்கையிலே எதை நடப்பிக்கின் றார்கள் என்பதைக் குறித்தும், எதை நடப்பிக்காமல் இருக்கின்றார்கள் என்பதைக் குறித்தும் எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். தங்கள் வாழ்நாட்களிலே மனிதர்கள் பல கொள்கைகளையும் அதை சார்ந்த கிரியைகளையும் நடப்பிக்கின்றார்கள். அதனால் அவர்கள் தங் கள் கொள்கைக்கு ஏற்ப காரியங்களை நடப்பிப்பதால் மனதிருப்தியடை யலாம். ஆனால் அவை தேவனுக்கு பிரியமுள்ளதாக இருக்கின்றதா என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். தேவனுடைய ஆவி யினாலே நடத்தப்படுவதற்கு தங்களைவிட்டுக் கொடுக்கின்றவர்கள், தங்கள் பெலனுக்கு தக்கதாக சிறிதான காரியங்களை நடப்பித்தாலும், அவை தேவனுக்கு பிரியமுள்ளதாக இருக்கின்றது. எனவே நாம், கடைசிநாளிலே, எப்படிப்பட்ட ஆச்சரியம் நமக்கு உண்டாயிருக்கும் என்பதை குறித்து நாம் எண்ணமுள்ளவர்களாக வாழ வேண்டும்.

ஜெபம்:

வாக்குமாறாத தேவனே, ஆண்டவர் இயேசுவின் நாளிலே, நாம்; உம்முடைய ராஜ்யத்திற்கு உகந்தவர்களாக காணப்படும்படிக்கு இந்த நாளிலே நீர் நம்மை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபே 2:1-9