புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 16, 2022)

ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டவர்கள்

எபேசியர் 4:4

உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டது போல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு;


ஒரு முறை செய்தால் என்ன? இப்படி செய்யக்கூடாது என்று எங்கே வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது? நீங்கள் செய்யாதவைகளையோ நாங்கள் செய்கின்றோம்? ஆண்டவர் இயேசு தள்ளிவிடுவாரோ? என்ற கேள்விகளை கேட்கின்றவர்கள், ஏதோ ஒரு காரியத்திலே, தங்கள் மாம்சத்தின் இச்சைகளை நிறைவேற்றுகின்றதற்கு தங்கள் இருதயத்தில் தீர்மானம் செய்திருக்கின்றா ர்கள். ஆண்டவர் இயேசு தள்ளிவிடுவாரரோ? இரக்கத்தில் ஐசுவரி யமுள்ளவர் மனந்திரும்புகின்ற பாவியை மன்னிக்க எப்போதும் தயை பெருத்தவராக இருக்கின்றார். ஆனால், இந்த சுபாவமுடைய மனிதர்கள், தேவனுடைய வார்த்தைகளை அசட்டை செய்வதற்கு சிறிது சிறிதாக தங்களையே தாங் கள் பயிற்சிவிக்கின்றவர்களாக இருக்கின்றார்கள். பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டு போகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கிறது. அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக் கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை. புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்க ளில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். இந்த இரண்டு வகையான கன்னிகைகளுக்கும் ஒரேவிதமான அழைப்பும், அழைப்பை அணையா மல் காத்துக் கொள்ளும் ஆவியானவரின் அபிஷேகமும் கொடுக்கப்பட்டது. நாம் யாவரும், அந்தக் கனிகைகளைப் போல ஒரேவிதமான அழைப்பை பெற்றிருக்கின்றோம். ஆனாலும், ஆவியை அவித்துப்போடாதபடிக்கு, அசட்டையான வாழ்க்கையை நாம் நம்மைவிட்டு முற்றிலும் அகற்றிப் போட வேண்டும். மணவாளன் எதிர்பாரத நேரத்தில் வந்த போது, புத்தியில்லாத 5 கன்னிகைகளுமோ ஆயத்தமற்றவர்ளாக இருந் தார்கள். தங்கள் மாம்சத்தின் ஆசை இச்சைகளை நிறைவேற்றுவதற்கு சாட்டுப் போக்குகள் தேடுகின்றவர்களும், பரம அழைப்பின் ஆயத்தத்தைவிட, தங்கள் ஆசை இச்சைகளை தங்கள் வாழ்வில் மேன்மைனப் படுத்துவதால், ஆண்டவராகிய இயேசுவின் வருகையை குறித்த வாஞ்சையை இழந்து போய்விடுகின்றார்கள். நீங்களோ அப்படியிராமல் எப்போதும் விழிப்புள்ளவர்களாக ஆயத்தமாக இருங்கள்.

ஜெபம்:

மேன்மையான அழைப்பை தந்த தேவனே, நாம் மதியீனமானவர்களாய் பாவம் செய்வதற்கு காரணங்களைத் தேடாமல், விழிப்புள்ள வாழ்க்கை வாழும்படிக்கு, பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 4:17-24