புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 15, 2022)

மேன்மையான நோக்கத்தை பெற்றவர்கள்

பிலிப்பியர் 3:14

பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.


வரா இறுதி நாட்களிலே, இரண்டு நண்பர்கள், தங்கள் வகுப்பிலுள்ள வேறு சில மாணவர்களோடு சேர்ந்து, தவணைப் பரீட்சைக்கு ஆயத்த ப்படும்படியாக, தங்கள் பெற்றோரின் அனுமதியோடு, பட்டணத்திலு ள்ள நூலகமொன்றிற்கு படிக்கச் செல்வது வழக்கமாக இருந்தது. இப் படியாக ஒரு நாள், அந்த இரண்டு நண்பர்களும், குறிப் பிட்ட நூல கத்திற்கு சென்றபோது, அங்கு வந்த சக மாணவர்களில் ஒருவன், மற்றவ ர்களை நோக்கி: இன்று உலக பிரசித்தி பெற்ற திரைப்படமொன்று வெளி வந்திருக்கின்றது, அடுத்த வாரம் நாங்கள் இரட்டிப்பாக படிப் போம். இன்று திரைப்படத்தை பார்ப தற்கு செல்வோம் என்றார்கள். சென்ற நண்பர்களில் ஒருவனோ, திரைபடத்திற்கு செல்லும் மாணவர்களோடு இணைந்து கொண்டான். மற்றவனோ, நான் வரமாட்டேன் என்று படிக்கும்படிக்கு வீடு திரும்பும் போது, அவனுடைய நண்பனானவன் அவனை நோக்கி: நண்பா, இது முதலாhம் தவணைப் பரீட்சை, கடினமாக இருக்காது. நாங்கள் மற்ற நாட்களில் படித்தோம் தானே, ஒரு நாள் இப்படி செல்வதில் தவறி ல்லை. எனவே என்னோடு கூட வா என்றான். ஆனாலும் மற்றய நண் பனோ, மாட்டேன் என்று உறுதியாக வீடு திரும்பினான். மற்றவர்கள் யாவரும் அவனைப் பார்த்து ஒன்றுக்கும் ஒத்து வராத கிறுக்கன் இவ னென்று கூறினார்கள். பிரியமானவர்களே, இந்த சந்தர்பத்தை சற்று சிந் தித்துப் பாருங்கள். ஒருவேளை, திரைப்படம் பார்க்கச் சென்ற நண்ப ர்கள், படித்து, தவணைப் பரீட்சையில் சித்தி பெறலாம் ஆனால் திரை ப்பட த்திற்கு சென்ற அந்த மாணவர்கள் தங்கள் வாழ்க்கையிலே: தங்கள் பெற்றோருக்கு எதிரான நம்பிக்கை துரோகம், அற்பகால இன்பத்திற் காக மேன்மையான நோக்கத்தை அற்பமாக எண்ணுதல், தங்களோடு சேர்ந்திருக்கின்றவர்களை தவறான வழிக்கு நடத்திச் செல்லுதல், நேர த்தை விரையப் படுத்துதல் போன்ற பல வித்துக்களை விதைத்திருக்கின் றார்கள். அந்த வித்துக்கள் அவர்களுடைய வாழ்க்கையிலே வளர்ந்து அதன் விளைவைக் காண்பிக்கும். பரலோக யாத்திரிகளாகிய இந்த உல கத்தை கடந்து செல்லும் நாம், நம் கண்களை எப்போதும், இலக்கின் மேல் பதிய வைத்தவர்களாக வாழவேண்டும். மாம்சத்தின் எண்ணங் களை நிறைவேற்றும்படியாக உலக போகிற்குள் போகும் வரத்துமாக வாழும் வாழ்க்கையானது, தூய்மையான நமது மனச்சாட்சியை மாசுபடுத்தி விடும். எனவே பெற்றுக் கொண்ட அழைப்பை காத்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

மேன்மையான பரம அழைப்பிற்கு பங்காளிகளாக எம்மை அழைத்த தேவனே, ஒரு வேளை போஜனத்திற்காக புத்திரசுவிகாரத்தை விற்ற ஏசாவைப் போன்ற சுபாவம் என்னைவிட்டு முற்றிலும் நீங்கிப் போவதாக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:15-17