புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 14, 2022)

புத்தியுள்ளவன் யார்?

மத்தேயு 7:25

பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.


வேதம் கூறும் புத்தியுள்ள மனுஷன் யார்? புத்தியில்லாத மனுஷன் யார்? இவை இரண்டையும் குறித்து ஆண்டவராகிய இயேசு தெளி வாக வகுத்துக் கூறியிருக்கின்றார். நம் ஆண்டவரரிகய இயேசு இவை களை தெளிவாக வகுத்து கூறியிருப்பதால், நாம் இவை இரண்டையும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். ஏன் நாம் புத்தியுள்ளவனை மட்டும் அறிந்தால் போதாதா? ஏன் புத்தியில்லாதவன் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்? இந்த உலகத்தின் பார்வை யிலே புத்தியுள்ளவன் என்ப தற்கு ஒரு வரைவிலக்கண மும், வாழ்க்கை முறையும், அளவுகோலும் உண்டு. ஆனால், அந்த வரைவிலக் கணம், வாழ்க்கை முறையும், அளவுகோலும் தேவனுடைய வார்த்தைக்குட்பட்டிராவிட்டால், அது வேதத்தின்படி புத்தியற்ற மனுஷனுடைய வாழ்க்கையாகவே இருக்கின்றது. இன்று பல மனிதர்கள், உலகத்தின் போக்கின்படி தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, கிறிஸ்தவத்தை ஒரு மதமாக தங்கள் வாழ்க்கையிலே அனுசரித்துக் கொண்டு, அவ்வப்போது ஆலயத்திற்கு செல்வதும், கர்த்தராகிய இயேசு நல்லவர் என்றும் சொல்லிக் கொள்கின்றார்கள். இத்தகைய வாழ்க்கையா சமப்படுத்தப்பட்ட வாழ்வு என்று இந்த உலகத்திலுள்ள பல மனிதர்களால் ஏற்றுக் கொள்ளப்பட் டிரு;ககின்றது. ஆனால் உலகத்தினால் புத்தியுள்ள வாழ்க்கையென்று பெயர்பெற்ற இத்தகைய வாழ்க்கையிலே பிதவாகிய தேவனுடைய சித்தமானது நிறைவேற்றப்படுவதில்லை. இப்படிப்பட்ட வாழ்க்கையானது, கர்த்தராகிய இயேசு சொல்லிய வார்த்தைகளின்படி உறுதியான அஸ்த்திபாரத்தின்மேல் தன் வீட்டைக்கட்டாமல், மணலின்மேல் வீட்டைக் கட்டின புத்தியில்லாத மனுஷனுடைய வாழ்க்கையாக இருக்கின்றது. புத்தியுள்ள மனுஷன் யார்? பரலோகத்திலிருக்கின்ற பிதா வின் சித்தப்படி தன் வாழ்க்கையை அமைத்தவன். இந்த வாழ்க் கையானது, பரலோத்தினால் அங்கீகாரம் பெற்றதும் நற்கனிகள் நிறைந்ததுமான வாழ்க்கையாகும். இந்த வாழ்க்கையை வாழ்பவன், புத்தி யுள்ள மனுஷனாக இருக்கின்றான். அவன், ஆண்டவராகிய இயேசு சொல்லிய திருவார்த்தைகளின்படி, உறுதியான கன்மலையின்மேல் அத்திவாரத்தைப் போட்டு, தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனாக இருக்கின்றான்.

ஜெபம்:

என் வருங்காலத்தை அறிந்த தேவனே, இந்த உலகத்தினால் நான் புத்திமான் என்று புகழப்படாமல், உம்முடைய வார்த்ததையின்படி நான் புத்தியுள்ளவனாக வாழும்படி என்னை நட்த்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதிமொழிகய் 9:10