புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 13, 2022)

இடுக்கமான வாசலும் விரிவான வாசலும்

மத்தேயு 7:13

இடுக்கமான வாசல் வழி யாய் உட்பிரவேசியுங்கள்;


ஆண்டவராகிய இயேசு ஜீவனுக்குப் போகிற வாசலை பற்றி கூறிய போது, அத்தோடு நிறுத்திவிடாமல், மனிதர்கள் ஜீவனுக்கு போகின்ற வாசல் வழியாக செல்வதை தெரிந்து கொள்ளாத போது, இலகுவாக நுழையக் கூடிய, தங்கள் மனம் போகின்ற வழியிலே செல்லும் கேட் டின் வாசல் வழியாகவே நுழைந்து கொள்வார்கள் என்பதையும் கூறியி ருக்கின்றார். ஜீவனுக்கு செல்லுகின்ற வாசலானது ஏன் இடுக்கமாயும், அதன் வழி நெரு க்கமாயும் இருக்கின்றது? இந்த வாசலின் வழியாக செல்பவர்க ளுடைய சுயம் சாம்பலாக மாறி, பிதா வாகிய தேவனுடைய சித்தமே வாழ் வின் நோக்கமாக மாற வேண்டும். இந்த வழியிலே மாம்சத்தின் ஆசை இச்சைகளுக்கு இடம் இல்லை. அன்றாட சோதனைகளை எதிர்த்து நிற்க வேண்டும். நடை, உடை, பாவனை பேச்சு எல்லாவற்றிலும் எச்ச ரிக்கையாக இருக்க வேண்டும். பாடுகள் உபத்திரவங்களை சகித்து, தீமை செய்தவர்களுக்கு தீமை செய்யாமலும், தீமை செய்தவர்களை தவிர்த்துக் கொள்ளாமலும், தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். இதுவே நித்திய ஜீவனுக்குச் செல்கின்ற வாசல். இந்த வாசல் வழியாக பிரவேசிப்பவர்களுக்கு வேறு பல தெரிவுகள் இருப்பதி ல்லை. ஒரே வழி! ஒரே வாசல்! இந்த வழியும் வாசலும் ஆண்டவராகிய இயேசுவாகவே இருக்கின்றார். ஆதலால் அந்த வழி மனிதர்களுக்கு இடுக்கமாக தோன்றுகின்றது. ஆனால் ஒரு மனிதனானவன், ஜீவனுக்கு போகின்ற வாசலை தள்ளிவிட்டால், அவன் கண்போன போக்கிலே எப்படியும் வாழலாம், அந்த வழியிலே பல தெரிவுகள் இருக்கும். தங்களுகென்று பல மதங்களையும், கடவுள் இல்லை என்றும் பல கொள்கைகளையும் ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்தப் பாதையானது இலகுவானது, சுயவிருப்பதை நிறைவேற்ற ஏற்புடையதும், பல கொள் கைகளையுடையதும், பல மனிதர்களால் அங்கீகரிக் கப்பட்டதுமாக இருக்கின்றது. மனிதர்களுடைய பார்வைக்கு இது செம்மையாக தோன்றுகின்றது. அதன் வழி விசாலமானது. எனவே இதன் வழியாக அநேகர் பிரவேசிக்கின்றார்கள். அந்த வாசல் மனிதர்களை கேட்டிற்கு கொண்டு செல்லும் என்று தேவனுடைய வார்த்தை கூறுகின்றது. பிரியமானவர்களே, நமக்கு முன்பாக இரண்டு வாசல்கள் வைக்கப்பட்டி ருக்கின்றது. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான் என்று இரட்சகர் இயேசு கூறியிருக்கின்றார். அந்த வாசல் வழியாகவே பிரவேசியுங்கள்.

ஜெபம்:

பரலோகத்தின் வாசலை நமக்கென்று திறந்த தேவனே, அந்த வாசல் வழியாக நாம் உட்பிரவேசித்து, உமக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்ந்து, முடிவிலே நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளும்படி வழிடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 3:36