புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 12, 2022)

நன்மையும் தீமையும்

சங்கீதம் 34:14

தீமையை விட்டு விலகி, நன்மைசெய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்.


ஆதியிலே தேவனாகிய கர்த்தர்தாமே, மனுஷனைச் சிருஷ;டித்த நாளிலே அவனைத் தேவசாயலாகவே சிருஷடித்தார். அவர்களை ஆணும் பெண் ணுமாகச் சிருஷ;டித்து, அவர்களை ஆசீர்வதித்தார். மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக் கவும் வைத்தார். இவை யாவும் நன்மையானதாக இருந்தது. ஆனாலும், அவர்கள் அழிந்து போகாதபடிக்கு, தேவனானவர் உண்மையை அவர்க ளுக்கு தெரிவித்தார். அதாவது தேவ னாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத் தின் கனியையும் புசிக்கவே புசிக்க லாம். ஆனாலும் நன்மை தீமை அறி யத் தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். தேவனானவர், மனி தர்கள் மேல் வைத்த அன்பின் நிமித்தம், அவர்கள் நித்திய மரணத் திற்குட்பட்டவர்ளாக மாறிவிடக்கூடாது என்பதற்காகவே அவர்களுக்கு அந்த உண்மையை தெரிவித்தார். பிரியமானவர்களே, இன்றைய நாட்களிலே, தேவனுடைய வார்த்தைகள் அடங்கிய பரிசுத்த வேதாகமம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த வேதாகமத்தை நாம் சத்திய வேதம் என்றும் அழைக்கின்றோம். நித்திய ஜீவனை கொடுக்கும் அந்த வார்த்தைகளை நாம் தினமும் வாசிக்கின்றோம். கிழமைதோறும் ஆல யத்திலே தேவ செய்திகளையும் கேட்கின்றோம். வேத பாடங்களை கற் றுக் கொள்கின்றோம். இன்று சிலர் அதிலுள்ள நன்மையைப் பற்றி மட் டுமே கற்றுக் கொள்ளுவோம், தீமையையும் வஞ்சகத்தைப் பற்றி கூறப் பட்டவைகளை அறிந்து கொள்ள தேவையில்லை என்று கூறுகின்றார் கள். நாம் வேதாகமத்தின் பாதியை கற்றுக் கொள்வது போதுமென்ற hல், இந்த உலகத்திலே காணப்படும் தீமைகளையும், வஞ்சகங்களையும் குறித்து தேவனாகிய கர்த்தர் தம்முடைய தாசர்கள் வழியாக எதற்காக எழுதிக் கொடுத்திருக்கின்றார்? நமக்கு நன்மை எது? தீமை எது? என் பதை தேவன் ஒருவரே அறிந்திருக்கின்றார். இந்த உலகிலே இருக்கும் வஞ் சகமானவைகளும், தீமையானவைகளும் நம்மை நோக்கி வரும் போது, மனிதர்கள் அவைகள் தங்களுக்கு நன்மையானவைகள் என வஞ்சக வலையிலே சிக்கிக் கொள்கின்றார்கள். அதனால் நாம் பரிசுத்த வேதாகமத்தை முழுமையாக கற்றுக் கொண்டு, வஞ்சகமானவைகளை தள்ளிவிட்டு, தேவ சமாதானத்தை நாடி நித்திய ஜீவனை பற்றிக் கொள்ளும்படிக்கு முன்னேறிச் செல்ல வேண்டும்.

ஜெபம்:

நன்மை செய்யும் தேவனே, நீர் எமக்கு கொடுத்திருக்கும் வேதத்தை பூரணமாக கற்றுக் கொண்டு, உம்முடைய நோக்கம் எம்மில் நிறைவேறும்படிக்கு தீமையை விலக்கிவிட ஞானமுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - ரோமர் 12:21