புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 11, 2022)

நமக்கு முன்னிருக்கும் தெரிவுகள்

உபாகமம் 30:15

இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்.


ஒரு மனிதனாவன் தூரத்திலுள்ள கிராமமொன்றிலிருக்கும் வைத்திய ரொருவரை சந்திக்கும்படியாக, தன் மனைவியோடு சைக்கிளிலே சென்று கொண்டிருந்தான். வெகு நேரமாக அவர்கள் பயணம் சென்று கொண் டிருந்ததால், வழியோரமாக சைக்கிளை நிறுத்திவிட்டு, அருகிலிருந்த கடையொன்றிலே நின்ற வாலிபனொருவனை நோக்கி: தம்பி, நான் குறி ப்பிட்ட கிராமத்திற்கு செல்ல வேண்டும், நாங்கள் போகின்ற வழி சரி யானதா என்று விசாரித்தான். அந்த வாலிபன், ஆம் இது தான் சரியான வழியென்று கூறினான். அந்த மனிதனானவர், தொடர் ந்து பயணத்தை ஆரம்பிக்கும் படி திரும்பிய போது, அங்கு நின்ற ஒரு வயதானவர், அந்த மனிதனானவனை நோக்கி: நீங் கள் சென்று கொண்டிருக்கும் வழி சரியானது தான் ஆனால் நீங்கள் இன்னும் இரண்டு மைல் தூரம் சென்றதும், இந்த பாதை இரண்டாக பிரிந்து செல்லும், அதிலே நீங்கள் வலது பக்கத்தில் பிரியும் பாதை வழியாக சென்றால் மட்டுமே நீங்கள் செல்லும் அந்த கிராமத்திற்குச் செல்ல முடியும். நீங்கள் இடது பக்கம் சென்றால், நீங்கள் பொல்லாத மனிதர்கள் வாழும் இடத்திற்கு சென்று விடுவீர்கள் என்று அந்த மனித னானவனுக்கு முழுமையான உண்மையை முழுமையான எடுத்துக் கூறி னார். பிரியமானவர்களே, தெளிந்த குடி தண்ணீருக்குள் ஒரு துளி விஷம் கலந்தால் அந்த தண்ணீரை, கொஞ்சம் குடிக்கக் கூடிய தண்ணீர் என்று கூற முடியுமா? உண்மையை கூறும் போது, அதிலே கொஞ்சம் பொய் இருந்தால் அது உண்மை என்று சொல்லமுடியுமா? போகும் வழியிலே தீமையும் ஆபத்தும் ஏற்படும் அபாயம் இருக்கும் போது அதை கூறாமல், வழியிலே இருக்கும் நன்மையை மட்டும் கூறு வது சரியாகுமா? ஒரு வேளை இந்த உலக போக்கிற்கு அது ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் பாதிக் கதையை அல்லது பாதி உண்மையை கூறும் இடத்திலே, வஞ்சிக்கப்பட்டு போவதற்கு ஏதுவாக அங்கே பொய் க்கு இடம் உண்டாகும். நாம் ஆராதிக்கும் தேவனாகிய கர்த்தரோ உண்மையை உள்ளபடி கூறு கின்றவராயிருக்கின்றார். அவர் நம்மைக் குறித்து வைத்திருக்கின்ற நினைவுகள் தீமைக்கல்ல, சமாதானத்துக் கேதுவான நினைவுகளே. ஆனாலும், இந்த உலகிலே நமக்கு முன்பாக இருக்கும் தெரிவுகளை யும் அதனால் வரும் பின்விளைவுகளையும் அவர் நமக்கு தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றார்.

ஜெபம்:

உண்மையுள்ள தேவனே, உம் வார்த்தைகளை நான் கேளாதபடி க்கு, மனம் பேதலித்து, இழுப்புண்டுபோய், வஞ்சகமான வலைக்குள் விழு ந்து போகாதாபடிக்கு பிரகாசமுள்ள மனக்கண்கனை தந்து வழிநடத்து வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏரேமியா 29:11