புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 10, 2022)

கடினமானது எது?

எபிரெயர் 3:13

உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.


கப்பர்நகூமிலுள்ள ஜெபஆலயத்திலே, ஆண்டவர் இயேசு போதித்துக் கொண்டிருத்த போது, அவருடைய போதகத்தை கேட்ட அவருடைய சீஷர்களில் அநேகர் இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பா ர்கள் என்றார்கள். ஆண்டவராகிய இயேசு தம் போதகத்தை கேட்டுக் கொண்டிருக்கின்றவர்கள், நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவர்களுடைய சரீரத்தை வருத்தும்படிக்கோ, பெரும் கிரியைகளை நடத்தும்ப டிக்கோ கூறவில்லை. மாறாக 'தன் னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவ னுக்கு' நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்க ளுக்குச் சொல்லுகிறேன் என்று கூறி னார். இந்த உபதேசம் கடினமானது அல்ல. அப்படியானால் ஏன் கேட்டு க்கொண்டிருந்தவர்களுக்கு அது கடி னமாக இருந்தது. இந்த உபதேச த்தை கேட்டவர்கள், தங்கள் நிலை மையை ஏற்றுக் கொள்ள விரும் பாதவர்களும், தங்கள் மாம்சத்தின் கிரியைகளையும் பாவ வாழ்;க்கை யையும் ஏற்றுக் கொள்ள தங்கள் செவியை அடைத்ததால், அவர்களின் இருத யமானது கடினப்பட்டிருந்தது. அதனால் அவர்களுக்கு ஆண்டவர் இயே சுவின் உபதேசமானது மிகவும் கடினமாக தோன்றிற்று. பிரியமா னவர்களே, இன்று தேவனுடைய வார்த்தையை நீங்கள் கேட்கும் போது, அவை உங்களுக்கு கடினமாகவும், இடறலாகவும் தோன்றினால், நீங்கள் உங்கள் இருதயத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும். 'சகோத ரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாச முள்ள பொல்லாத இருதயம் உங்களிலொருவனுக்குள்ளும் இராதபடி க்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். உங்களில் ஒருவனாகிலும் பாவ த்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்ன ப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள். நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களா யிருப்போம். இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூ ட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தா திருங்கள் என்று சொல்லியிருக்கிறதே.' (எபி 3:12-15). எனவே, தேவ வார்த்தைகளை கேட்கும் போது, அவை கனடினமானது என்று உங்கள் இருதயங்களை கடினப்படுத்தாமல், தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்.

ஜெபம்:

இருதயங்களை புதிதாக்கும் தேவனே, உம்மாலே எல்லாம் கூடும் என்று நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருக்க உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 19:25-26