புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 09, 2022)

அன்பின் அழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்

ஓசியா 11:4

மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன்


ஒரு ஊரின் ஒதுக்கு புறத்திலே, ஆபத்தான சதுப்பு நிலப் பகுதியில், அந்த ஊரில் வாழ்ந்த சில மனிதர்கள் சென்று கொண்டிருப்பதை கண்டு கொண்ட கருணையுள்ளமுள்ள பெரிய மனிதனானவரொருவர், அவர் களை காப்பாற்றும்படிக்கு, தான் வழமையாகச் செல்லாத அந்த இடத் திற்கு சென்றிருந்தார். மரம் வெட்டும்படிக்கு சென்ற அந்த மனிதர்களின் கணுக்கால் அளவிற்கு சேறும் சகதியும் இருந்தது. அந்த பெரிய மனித னானவர், அங்கே நின்றவர்களை பார்த்து, நீங்கள் நிற்கின்ற பூமியின் நிலப்பகுதியானது சதுப்பு நிலங்கள் உள்ளது.இன்னும் கொஞ்ச நேரத்தில் நீங்கள் வெளிய வர முடியாதபடிக்கு, உங்கள் உயி ருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே நான் எறியும் இந்த கயிற்றை பிடி த்து கொள்ளுங்கள், நான் ஒவ்வொருவராக உங்களை வெளியே இழு த்துக் கொள்வேன் என்று கூறினார். அவர்களில் இருவர் அந்த பெரிய மனிதனானவருடைய அறிவுரையை கேட்டு, கயிற்றைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தார்கள். வேறு சிலரோ அவர் தங்கள் பிழை களை சுற்றிக் காட்டியதால், மனக்கடின மடைந்து, காப்பாற்ற வந்த மனிதனின்மேல் கடுங்கோபம் கொண்டார்கள். வெளியே வர மனதி ல்லாதவர்கள் அந்த பெரிய மனிதனானவரை நோக்கி: இந்த இடத்தைப் பற்றி நாங்கள் நன்றாக அறிந்திருக்கின்றோம். எங்களை காப்பாற்றி கொள்ளுவதற்கு எங்களுக்கு பெலனுண்டு என்று அந்த பெரிய மனித னானவருடைய உதவியை நிராகரித்து அவரை அசட்டை செய்தார்கள். இந்த சம்பவத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள். இவ்வண்ணமாகவே, விண்ணுலகின் வேந்தனாகிய ஆண்டவர் இயேசு, இந்த பூவுலகில் வாழும் மாந்தர்கள் தங்கள் பாவங்களினால் அழிந்து போகாமல் காக்கும் படிக்கு தம்மைத் தாழ்த்தி இந்த பூவுலகிற்கு வந்தார். அவர் பாவிகளை புறம்பே தள்ளாமல் அவர்களை தேடிச் சென்று, அவர்கள் இருக்கும் உண்மையான நிலைமையை அவர்களுக்கு அறிவித்தார். பாவத்தி லிருந்து விடுதலையடையும் வழியை அவர்களுக்கு காண்பித்தார். அதை ஏற்றுக் கொண்டவர்கள் மீட்பை பெற்றுக் கொண்டார்கள். தங்கள் இருதயங்களை கடினப்படுத்தினவர்களோ, அழிவின் பாதையிலேயே சென்று கொண்டிருந்தார்கள். பிரியமானவர்களே, இன்றைய நாட்க ளிலே, வேத போதனைகளை கேட்கும் போது, உங்களது இருதயங்களை கடினப்படுத்தாமல், நீங்கள் உங்களை நிலைமையை உய்ந்து ஆராய் ந்து, அன்போடு அழைக்கும் இயேசுவினிடத்தில் திரும்பிக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

நாங்கள் செல்ல வேண்டிய வழியை போதிக்கும் தேவனே, உம் முடைய திருவசனத்தை கேட்கும் போது, நாங்கள் எங்களை வஞ்சியாதபடிக்குத் அதின்படி செய்கிறவர்களாக இருக்க உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங் 40:2-3