புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 08, 2022)

அன்புள்ள ஜீவ வசனங்கள்

யோவான் 6:63

நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.


ஒரு சமயம், இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, திரளான ஜனங்கள் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டு அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார். சாயங்காலமானபோது, அவர்களை பசியாய் அனுப்பிவிட மனதில்லா மல், அங்கிருந்த ஒரு சிறுபையனிடமிருந்த ஐந்து வாற்கோதுமை அப்ப ங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடு த்தார்கள். ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர்கள் ஏறக்கு றைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள். எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடை ந்தார்கள்; மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார் கள். ஆண்டவராகிய இயேசு, மனதுருக்கமுடையவர்;, வியாதிகளை சொஸ்தமாக்குகின்றவர், அதிசயங்களை செய்கின்றவர். இவையெ ல்லாம் அவருடைய தெய்வீகத் தன்மைகள். இப்படியான நன்மைகளை பெற்ற ஜனங்கள், தவறான நோக்கத்திற்காக அவருக்கு பின் சென் றார்கள். அந்த வேளையிலே அவர்களை நோக்கி: நீங்கள் அற்புதங்க ளைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதி னாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அந்த வேளையிலே அவரைப் பின்பற்றியவர்களுக்குள் முறுமுறுப்பு உண்டாயிற்று. அன்புள்ள ஆண்ட வர் இயேசு, அவர்களை வெறுத்ததினாலே இப்படிச் சொல்லவில்லை. மாறாக, அவர்கள் தங்களது தவறான நோக்கத்திலிருந்து விடுதலை யடைய வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு அவர்களுடைய நிலை மையையும், சத்தியத்தையும் எடுத்துரைத்தார். அழிந்துபோகிற போஜ னத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்தி ற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை நான் உங்களுக்கு தருவேன் என்று அவர்களுக்கு கூறினார். அன்று நித்திய ஆசீர்வாதத்தின் ஜீவனு ள்ள வசனங்களை இயேசு அவர்களுக்கு கூறியிருந்தும் அவர்க ளில் அநேகர் உண்மையை ஏற்றுக் கொண்டு மனந்திரும்ப மனதில்லாமல், அவருட னேகூட நடவாமல் பின் வாங்கிப்போனார்கள். இன்று, நீங்க ளோ, இயேசுவின் ஜீவனுள்ள வசனங்கள் வழியாக உங்களது உண்மை நிலைமையானது வெளிப்படுத்தப்படும் போது, உங்களை தாழ்த்தி ஆண்டவர் இயேசுவினிடத்தில் உங்களை ஒப்புக் கொடுங்கள்.

ஜெபம்:

அழியாத நித்திய ஆசீர்வாதத்தின் வழியை காண்பிக்கும் தேவனே, நான் என்னுடைய உண்மை நிலைமையை அறிந்து, என் குறைகளை விட்டுவிட்டு, உம்மைப் பின்பற்றி வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 14:14