தியானம் (பங்குனி 07, 2022)
தேவ அன்பும் எச்சரிப்பும்...
மாற்கு 13:23
நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்
தேவன் அன்பாகவே இருக்கிறார். தம்முடைய ஒரேபேறான குமார னாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூ ர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. (1 யோவான் 4:8-10). பிதாவாகிய தேவன் நம்மேல் பாராட்டியிருக்கும் அன்பு அளவிடமுடியாததும், ஆச்சரியமானதும், மனிதனுடைய அறிவுக்கு அப்பாற்பட்டதுமாயிருக்கின்றது. அவர் நம்மேல் அன்புகூர்ந்ததால், நாம் அதி மேன்மையான பரலோக வாழ்வை அடையும்படிக்கு சித்தம் கொண்டிருக்கின்றார். பொதுவாக மனி தர்கள், தேவனுடைய அன்பையும், ஆசீ ர்வாதத்தையும், கிருபையையும் பற்றி பேசுவர்களை மட்டுமே ஏற்றுக் கொள் கிறார்கள். ஆனால், உண்மையை எடுத் துரைக்கும் தேவனுடைய தாசர்களுக்கு தம் செவியை அடைத்து விடுகின்றார்கள். தேவன் நம்மேல் அன் புகூர்ந்ததால், நாம் ஆசீர்வாதத்தை சுதந்தரித்து கொள்ளும்படி அவர் விரும்புகின்றார். நாம் தவறிப் போய் பாவம் செய்யும் நேரங்களிலே, அதற்கு தக்கதாக நீதியை சரிக்கட்டாமல், அவருடைய கிருபையை நம்மேல் பொழிந்து, குற்றத்திற்குரிய தண்டனையை உடடினயாக வழங்காமல், ஒருவரும் கெட்டுப் போகா மல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு நம்மேல் நீடிய பொறுமையுள்ள வராக இருக்கின்றார். அவர் நீடிய பொறுயுள்ளவராக இருக்கும் கால த்திலே, பாவத்திலே வாழ்பவர்கள் மனந்திரும்பும்படிக்கு, தம்முடைய வார்த்தைகளை, தம்முடைய உண்மையுள்ள தாசர்கள் வழியாக அவர்க ளுக்கு வெளிப்படுத்தி, அவர்களுடைய உண்மையான நிலைமையை எடுத்துரைக்கின்றார். பிரியமானவர்களே, தேவன் நம்மேல் வைத்த அன்பு உண்மையுள்ளது. அதனால் அநேக காரியங்களைக் குறித்து நம க்கு முன்கூட்டியே எச்சரித்திருக்கின்றார். ஆனால் நாம் தேவ அன்பை உணராதிருந்து, மறுபடியும் பழைய வாழ்க்கைக்கு திரும்புவோமாக இருந்தால், தேவன்மேல் நாம் அன்பு இல்லாதவர்களாகவே இருப் போம். இப்படியான நிலைமையில் உள்ள வர்கள் தேவனுடைய அன் பின் எச்சரிப்பின் சத்தத்துக்கு செவி கொடு க்காதவர்களும், திவ்விய ஆசீர்வாதத்தை புறக்கணிக்கின்றவர்களும், தேவ கிருபையை அசட்டை பண்ணுகின்றவர்களாகவும் இருப்பார்கள்.
ஜெபம்:
அன்பின் பரலோக தேவனே, உம்முடைய எச்சரிப்பின் சத்தத்தை நான் அசட்டை செய்து நீர் கிருபையாய் தந்த நாட்களை வீணடிக்காதபடி க்கு, எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - எபிரெயர் 2:1