புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 06, 2022)

ஆலயத்தின் நிறைவு

1 கொரிந்தியர் 3:17

தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.


இந்த ஆண்டிலே, நம்முடைய சபை ஐக்கியத்திலே நாம் இன்னும் முன்னேற வேண்டிய காரியங்கள் என்ன என்பதைக் குறித்து சபையோர் கலந்துரையாடினார்கள். சபையிலே இருக்கும் வேற்றுமைகள், சில கருத்து முரண்பாடுகள், முறுமுறுப்புகள் போன்ற ஆகாத காரியங்களி லிருந்து நாம் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று சிலர் குறிப்பிட் டார்கள். கூட்டத்தின் முடிவிலே போத கர் சபையோரை நோக்கி: நானும் நீங் களும், வருடத்திற்கு ஒருமுறை அல்ல, அனுதினமும் நம்முடைய வாழ் க்கை யை ஆராய்ந்து பரிசோதித்து, குறை வுகள் இருக்கும் பட்சத்தில் அவை களை ஏற்றுக் கொண்டு, முன்னேறிச் செல்வ தும் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அத்தியசியமானது. வேற்றுமைகளும், கருத்து முரண்பாடுகளும், முறு முறுப்பு க்களும், இந்தக் கட்டிடத்தினாலோ, உள்ளே இருக்கும் தளபாட ங்களினாலோ அல்லது இசைக் கருவிகளினாலோ ஏற்படுத்தப்படுபவை கள் அல்ல. மாறாக, அவை கூடிவரும் விசுவாசிகளின் இருதயங்களிலே இருந்து புறப்பட்டு வருகின்றது. ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தர் கைகளாலே கட்டப்பட்ட வெறும் கட்டிடங்களுக்குள் வாசம் செய்பவர் அல்ல. நீங்கள் தேவனுடைய ஆலய மாயிருக்கிறீர்களென்றும், தேவனு டைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர் களா? (1 கொரி 3:16). உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற் றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமா யிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர் களா? (1 கொரி 6:19-20). எனவே, தேவனுடைய ஆலயத்திற்கு ஆகாத வைகள் யாவையும் நாம் நம் இருதயங்களிலிருந்து அகற்றிவிட வேண் டும். இது இந்த சபை ஐக்கியத்தையும் அதன் வளர்ச்சியையும் குறித்த விடயம் மட்டுமல்ல, அதி மேன்மையாக, தேவனுடைய சித்தம் நம் ஒவ் வொருவருடைய வாழ்விலும் நிறைவேறும்படிக்கு, நாம் தேவ சாயலிலே அனுதினமும் வளர்ந்து பெருகுவதையும் குறித்ததாகும் என்று ஆலோ சனை கூறினார். ஆம், பிரியமானவர்களே, தேவனுடைய வீடாகிய அவருடைய ஆலயத்தின் நன்மைகள் யாவும் நமக்குரியது என்று நாம் கடந்த நாட்களிலே தியானம் செய்தோம். நாம் அவர் தங்கும் ஆலய மாக இருப்பதால், நமக்குள்ளே அவருடைய வீட்டின் நன்மைகள் நிறை ந்திருக்கும் படிக்கு மாம்சத்தின் கிரியைகள் யாவையும் நம்மை விட்டு அகற்றி விடுவோமாக. அப்பொழுது நாம் செல்லும் இடமெங்கும் தேவ நன்மையை எடுத்துச் செல்கின்றவர்களாக விளங்குவோம்.

ஜெபம்:

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் தேவனே, பரிசுத்த ஆலய த்திற்கு ஆகாத சுபாவங்கள் யாவும் என்னைவிட்டு நீங்கும்படிக்கும், உம்முடைய திவ்விய சுபாவங்களினால் நிறைந்திருக்கவும் கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 4:30-32