புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 05, 2022)

அவன் செய்ததால் நானும் செய்தேன்...

ரோமர் 6:12

உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.


மாலை வேளையிலே, தங்கள் வீட்டிற்கு பின் புறத்திலே, பிள்ளைகள் பந்துதொன்றை எறிந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். பந்தானது தவறுதலாக பக்கத்து வீட்டின் வளவிற்குள் விழுந்ததால், அதை எடுக் கும் படிக்கு அந்தப் பிள்ளைகளில்; ஒருவன், ஒடிச் சென்றான். அதை கண்டு கொண்ட அயலவன், தான் வளர்த்து வந்த கடி நாயை கட்டவி ழ்த்து விட்டான். அந்த நாயானது ஒடிச் சென்று பந்தையெடுக்க வந்த சிறு பையனை கடித்து விட்டது. அதை அறி ந்து கொண்ட அந்த சிறு பையனின் தக ப்பனாவன், ஒரு நாள் சந்தர்ப்பம் ஏற்படும் போது, அந்த அயலவனுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்று கூறி, தன்னுடைய வீட்டிலே ஒரு கடிக்கும் நாயொன்றை வாங்கி வளர்த்து வந்தான். தனக்கும் ஒரு சந்தரப்;பம் கிடைக்கும் என்ற முழு எண்ணத்;தோடு, அந்த நாளுக்காக காத்திருந்தான். பிரியமானவர்களே, அந்த அயலவன் செய்த வெளிய ரங்கமான செயலானது, அவன் இருதயத்தில் என்ன ஆளுகை செய்கி ன்றது என் பதை வெளிப்படுத்தியது. அயலவனுடைய பொல்லாத இருதயத் திற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்ட அந்த தகப்பனானவன், தன் இருதயத்திற்குள் பொல்லாப்பை நுழை யவிட்டான். இப்போது, இவர்கள் இருவரின் இருதயங்களையும், பொல் லாப்பு செய்யும் எண்ணமே ஆளுகை செய்தது. சற்று சிந்தித்துப் பாரு ங்கள். உங்கள் உடன் சகோதரனொருவன், தன்னுடைய வீட்டிலே ஒரு விஷப்பாம்பை வைத்திருக்க விரும்பினால், நீங்களும் உங்களை பாது காக்கும்படிக்கு ஒரு விஷப்பாம்பை உங்கள் வீட்டில் வளர்த்து வந்தால் உங்களுக்கும் உங்கள் உடன் சகோதரனுக்கும் இடையேயுள்ள வித்தி யாசம் என்ன? மனிதர்களுடைய மனதிலே மறைந்திருக்கும் கசப்பானது அந்த விஷப்பாம்பை போன்றது. அது மற்றவர்களை தீண்டு முன்னதாக அதை வைத்திருப்பனுடைய வாழ்வின் நிம்மதியை கெடுத்து விடும். அந்த கசப்பானது அந்த மனிதனுடைய வாழ்க்கையை ஆளுகை செய் யும். அந்த அயலவன் எப்போது அந்த விஷப் பாம்பை நீக்கி விடுகின் றானோ அப்போது நானும் என் வீட்டிலிருக்கும் விஷப் பாம்பை நீக்கி விடுவேன் என்று கூறுவது மதியீனமானதாக இருக்கும். உடன் சகோதர னானவன், கசப்பை தன் உள்ளத்தில் வைத்திருக்க தீர்மானம் செய்தால்;, அது அவனுடைய முடிவை நிர்ணயிக்கும், ஆனால் நீங்களோ உங்கள் இருதயத்தை கேடுள்ளதாக மாற்றிவிடாமல், தேவ சமாதானம் உங்கள் இருதயத்தை ஆளும்படிக்கு, முதலாவதாக மனதிலே மறைந்திருக்கும் கசப்பை முழுமையாக அகற்றி விடுங்கள்.

ஜெபம்:

நன்மையின் ஊற்றாகிய தேவனே, மற்றவர்களுடைய பொல்லாத வழிகளினாலே நான் என்னை தீட்டுப்படுத்தாதபடிக்கு, என் இருதயத்தில் உம்முடைய சமாதானம் எப்போதும் ஆளுகை செய்யட்டும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கொலோ 3:15