புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 04, 2022)

தேவனுடைய வீட்டின் நன்மைகள்

ரோமர் 8:17

நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே;


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதனானவன், ஊர் மக்கள் மத்தியிலே நன்மதிப்பு பெற்றவனும், உத்தமனும், சன்மார்க்கனும், நற்குணங்கள் நிறைந்தவனுமாயிருந்தான். அவனுடைய வீட்டிலே சமாதானமும், பல நன்மைகளும் இருந்தது. அவனிடம் திரளான ஐசுவரியமும் இருந்தது. அவனுக்;கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். தகப்பனுடைய வீட்டின் நன்மைகள் யாவும் அவர்களுடைய சுதந்திரமாக இருந்தது. அவர்கள் இருவரும், தங்கள் வாய்ப் பேச்சினால், தாங்கள் இன்னாருடைய குமாரர்கள் என்று தகப்பனானவருடைய நற்பெ யரை சொல்லிக் கொண்ட போதிலும், அவர்களுடைய இருதயங்களோ, தங் கள் தகப்பனிடமிருந்த உலக ஐசுவரிய த்தின் மேலேயே இருந்தது. வீட்டின் நன்மைகளுக்கு பாத்திரமற்றவர்களாக நடந்து, பொருளாசை தங்களை ஆளு ம்படிக்கு அவர்கள் தங்கள் இருதயங் களை இந்த உலகக்தின் ஆளுகைக்கு ஒப்புக் கொடுத்தார்கள். பிரியமா னர்களே, பரம அழைப்பின் பந்தையப் பொருளுக்கு பங்காளி களாக அழைப்பைப் பெற்ற நாம். வானத்தையும் பூமியையும் படைத்த பிதாவா கிய தேவனுடைய பிள்ளைகளாயிருக்கின்றோம். நாம் அந்நியரும் பர தேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனு டைய வீட்டாருமாயிருக்கின்றோம். தேவனுடைய வீட்டின் நன்மைகள் யாவும் நம்முடைய சுதந்திரமாக இருக்கின்றது. பிதாவாகிய தேவனு டைய நாமத்தை தரித்த பிள்ளைகளாகிய நாம், அவருடைய திவ்விய சுபாவங்களை வாஞ்சிக்கின்றவர்களாகவும், பரலோகக்;திற்குரிய மேலான நன்மைகளை நாடித் தேடுகின்றவர்களாகவும் இருக்க வேண்டும். கொஞ் சக் காலம், இந்த பூமிக்குரியவைகளுக்கு அந்நியரும் பரதேசிகளுமா யிருந்து, கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு பாடுகளை சகிக்கின்றோம். நாம் இந்தப் பூமிக்குரியவைகளை நாடித் தேடுவோமாக இருந்தால், மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு குமாரர்களைப் போல, வீட்டின் நன்மைகளின் மேன்மைகளை உணர முடியாதவர்களாக, இந்த உலகத்தின் ஆளுகைக்கு உட்பட்டவர்களாகவே இருப்போம். எனவே நம் இருதயமானது இந்த மண்ணோடு ஓட்டிக் கொள்ள விடாமல், கூடார வாசிகளைப் போல, நன்மையும் கிருபையும் நிறைந்திருக்கும், நம்மு டைய தகப்பனுடைய வீட்டிலே, நீடித்த நாட்களாய் நிலைத்திருக்கும்படி கடந்து செல்வோமாக.

ஜெபம்:

கிறிஸ்துவுக்குள்ளாக நம்மை சுதந்தரராகும்படி தெரிந்துகொண்ட தேவனே, உம்முடை வீட்டின் மேன்மையான நன்மைகளை நாம் நாடித் தேடும்படிக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 1:12