புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 28, 2022)

இளைப்பாறுதல் தரும் தேவன்

சங்கீதம் 116:7

என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மைசெய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு.


என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது. என் ஆத்து மாவைப் பட்டயமும் மரணக் கண்ணிகளும் பின்தொடருகின்றது. என் ஆத்துமா பெலனற்றுப் போய் சஞ்சலத்தால் கரைந்துபோகிறது. விடுவி க்கிறவன் இல்லாமையால், என் ஆத்துமாவை பீறிப் போடும்படிக்கு சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொள்ளப் பார்க்கின் றான். விக்கினங்கள் சூழ்ந்து, விடுவி ப்பார் இல்லாமல் என் ஆத்துமா என க்குள் கலங்குகின்றது, அது தியங்கு கின்றது. இப்படியாக தேவனுக்கு பிரி யமாக வாழ்ந்த அநேக தாசர்கள் தங் ளுக்கு ஏற்பட்ட சூழ்நிலைகளைக் குறி த்து விவரித்து கூறியிருக்கின்றார்கள். அந்த வேளைகளிலே, அவர்களுக்கு இந்த உலகத்தின் அளவுகோலின்படி உலக அறிவு, சரீர பெலன், செல்வம், சமூக அந்தஸ்து அவர்களுக்கு இருந்த போதும், அவர்களோ அவைகளை சார்ந்து, தங்கள் வாழ்க்கை யின்; தீர்மானங்களை எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக அவர்கள்: என் ஆத்துமாவே நீ தேவனை அண்டிக்கொண்டிரு. என் ஆத்துமாவே, தேவ னையே நோக்கி அமர்ந்திரு. அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்த ரைத் துதி. கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகி றேன். என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே என்று அறிக்கையிட்டார்கள். தேவனு டைய நேரத்திற்காக பொறுமையோடு காத்திருந்தார்கள். அவர்களை சூழ இருந்த மனிதர்களோ இவர்களை பார்த்து, தேவனிடத்தில் இவர்க ளுக்கு இரட்சிப்பு இல்லையென்று, இவர்ளுடைய ஆத்துமாக்களைக் குறித்து அறிக்கையிட்டார்கள். இவர்களை எதிர்க்கின்றவர்கள் இவர்களு டைய ஆத்துமாக்களுக்கு படுகுழியை வெட்டினார்கள். இவர்களுடைய அழிவின் நாட்களை எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், தேவனாகிய கர்த்தரோ, இவர்களுடைய ஆத்துமாவை பெலப்படுத்தித் தேற்றி, சத்து ருக்களை முறியடித்து காப்பாற்றி, திருப்தியாக்கி, களிப்புள்ளதாய் மாற்றினார். பிரியமானவர்களே, இன்று உங்கள் ஆத்துமா எந்த நிலை யிலே இருந்தாலும், சொந்த பெலத்திலே தீவிரமான தீர்மானங்களை எடுக்காமலும், அவசரப்பட்டு வீணான வார்த்தைகளை வாயினால் அறிக் கையிடாமலும், முன்னோடிகளான தேவ தாசர்கள் செய்தது போல, மனத் தாழ்மையோடு தேவனுடைய நேரத்திற்காக நம்பிக்கை யோடே காத்திருங்கள். கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள்

ஜெபம்:

நிகரில்லாத தேவனே, ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக்கூடாதே. எம்மைச் சூழும் பயங்கரங்களிலே நாம் சோர்ந்தழிந்து மாய்ந்து போகாமல், எம்மைச் பெலப்படுத்தி வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 72:12-14