புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 27, 2022)

ஆத்துமாவை திருப்தியாக்குகின்றார்

சங்கீதம் 107:8

தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று,


சுமார் 400 வருடங்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலே இருந்த, தம்மு டைய ஜனங்களை, தேவனாகிய கர்த்தர்தாமே, தம்முடைய ஓங்கிய புயத்தினாலும், பலத்த கரத்தினாலும் விடுதலையாக்கி, வாக்களிக்கப் பட்ட தேசத்திற்கு வழிநடத்திச் சென்றார். நான்கு நூற்றாண்டுகளாக அடி மைகளாக உபத்திரவப்பட்ட அவர்களுக்கு, யுத்தம் செய்யும் ஆற்றல் ஏதும் இருந்ததில்லை. ஆனால், அவர் களுக்கு பல எதிரிகள் இருந்தார்கள். இலட்சக் கணக்காணோராக இருந்த அவ ர்கள் புறப்பட்டு சென்ற வனாந்தர வழி யிலே இரவிலே குளிரும், பகலிலே கடும் வெப்பமும் இருந்தது. கானகப் பாதையிலே பயங்கரங்கள் பல சூழ்ந்தி ருந்தது. உண்ண உணவும், குடிக்க தண் ணீரும், உடுக்க உடையும், பாதுகாப் பான உறைவிடமும் அவர்களுக்கு இருக்கவுமில்லை. அவர்கள் தாபரி க்கும் ஊரைக் காணாமல், வனாந்தரத்திலே அவாந்தர வழியாய், பசயிh கவும், தாகமாகவும், ஆத்துமா தொய்ந்ததாகவும் அலைந்து திரிந்தார் கள். ஆனாலும் தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள், கர்த்தரோ, அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்து, தாப ரிக்கும் ஊருக்குப்போய்ச்சேர, அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார். ஆம், நம்முடைய தேவனாகிய கர்த்தர் தவனமுள்ள ஆத்து மாவைக் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்பு கிறவராயிருக்கின்றார். பிரியமானவர்களே, முற்காலத்திலே, நாம் அக்கி ரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாக இவ்வுலக வழக்க த்திற் கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப் பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கே ற்றபடியாகவும், அடிமைத்தனத்திற்குட்பட்டவர்களாக இருந்தோம். நம் முடைய தேவனாகிய கர்த்தர்தாமே, இந்த உலத்தின் மாயையான போக் கிலிருந்து நம்மை விடுதலையாக்கி, தம்முடைய சொந்த பிள்ளைகளாக நம்மை வேறு பிரித்தார். இந்த உலகிலே நம்முடைய ஆத்துமா தொய் ந்;து, இழுப்புண்டு போவதற்கேதுவான பயங்கரங்கள் கண்ணை கவரும் காட்சிகளாக நம்மை சூழ்ந்து கொண்டிருன்றது. ஆனால், நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்களாய் ஆத்தும நேசராகிய இயேசுவின் மேல் வாஞ் சையாக இருக்கின்றவர்களின் ஆத்துமாக்களை, தேவன்தாமே தம்மு டைய வீட்டின் நன்மைகளால் திருப்தியாக்கி நடத்துகின்றார். எனவே தேவனுடைய நித்திய வீட்டிலே நாம் சென்றடையும் நாள்வரைக்கும் அவர்மேல் வாஞ்சையுள்ளவர்களாக இருப்போமாக.

ஜெபம்:

உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாக்கி நடத்தும் தேவனே, என் ஆத்துமா எப்போதும் உம்மேல் வாஞ்சையுள்ளதாக இருக்கும்படி என்னைக் காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 138:3