புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 26, 2022)

படு குழியில் இறங்காதபடி காத்தார்

சங்கீதம் 30:3

கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்.


ஒரு மாணவனாவன், இன்னும் சில கிழமைகளிலே வரவிருக்கும், முக் கியமான பரீட்யையொன்றிற்காக தன்னை ஆயத்தம் செய்து கொண்டி ருந்தான். அவனுடைய அர்ப்பணிப்பையும், விடாமுயற்சியையும் கண்ட அவனது கணித பாட ஆசிரியரானவர், அவன் அதிவிசேட சித்தியை அடைய வேண்டும் என்ற நன்நோக்கத்தோடே, அவனுக்கு மிகவும் ஆத ரவாக இருந்து, ஆலோசனை கூறி செய்து வந்தார். ஆனால் அவனுடைய சில நண்பர்களோ, அவனை நோக்கி: இந்த வார இறுதியிலே நாங்கள் சுற் றுலா ஒன்றுக்குச் செல்ல இருக்கின் றோம். நீயும் கொஞ்சம் உன்னை இல குவாக்கிக் கொண்டு, இரண்டு நாட்கள் எங்களோட வா. நாம் சற்று உல்லாசமாக இருப்போம். ஒன்றும் குறைந்து போகப் போவதில்லை என்று அவனை வருந்தி அழைத் தார்கள். ஆனால் ஆசிரியரோவெனில், வாலிபனுடைய மேன்மையையே கருத்திற் கொண்டிருந்தார் ஆனால் அவனுடைய குறிப்பிட்ட சில நண்ப ர்களோ தங்கள் நோக்கத்தையே நிறைவேற்ற வேண்டும் என்றிரு ந்தார்கள். தாங்களும் படிப்பதில்லை, படிக்கின்ற அந்த வாலிபனையும் விட்டுவிட விருப்பமுமில்லை. பிரியமானவர்களே, நம்முடைய ஆண்ட வராகிய இயேசுவும் அந்த நல்ல ஆசிரியரைப் போலவே, நாம் நித்திய வாழ்வை பரலோகிலே பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகி ன்றார். அதற்காக ஆயத்தங்கள் யாவையும் செய்து முடித்திருக்கின்றார். ஆனால் விழுந்து போன பிசாசானவன், நாம் நித்திய வாழ்வை அடை யாதபடிக்கு எப்படியாவது நம்மைத் தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்ற நோக்கத்துடன், நம்மையும் தன்னோடு கூட விழுத்திவிடுவதற்கு சந்தர்ப்பத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான். நாம் நம்முடைய ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக் கொடாமல் காத்துக் கொள்ளும்படிக்கு, எல்லாத் தீங்குக்கும் நம் ஆத்துமாவை விலக்கிக் காக்கும் நம் ஆண் டவர் இயேசுயே சார்திருக்க வேண்டும். பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும். (எசேக்கியேல் 18:4). நாம் பாதாளத்தின் அழிவை காணாதப டிக்கு ஆண்டவர் இயேசு நம்மை படு குழியிலிருந்து தூக்கி எடுத்தார். எனவே அதை உணர்ந்தவர்களாக, நாம் மறுபடியும் அந்தக் பாதாளப் படுகுழிக்குள்ளே நம் ஆத்துமா இறங்காதபடிக்கு, ஆத்தும இரட்சிப்பை தந்தவரை சார்ந்து ஆண்டவர் இயேசுவையே பின்பற்றி செல்வோமாக.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாமையால், அதைப் பீறாதபடிக்கு, அவனுடைய சதிகளுக்கு என்னைத் தப்புவித்த ருளும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 40:2