புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 25, 2022)

தேவ நீதியும் பிரியமான துதியும்

சங்கீதம் 35:28

என் நாவு உமது நீதியையும், நாள்முழுதும் உமது துதியையும் சொல்லிக் கொண்டிருக்கும்.


ஒரு மனிதனாவன் தன் அயலவனுக்கு நன்மைகள் பல செய்திருந்தான். ஆனால் ஆண்டுகள் சில கடந்து சென்ற பின்பு, அந்த நன்றியை மறந்து போன அயலவன், நன்மை செய்த மனிதனுக்கு விரோதமாக பெருந் தீமையை செய்தான். அதைக் கண்டு கொண்ட ஊரார், அந்த பொல்லாத அயலவனின் மேல் மூர்க்கம் கொண்டார்கள். அந்த ஊரும், அந்த ஊரின் நீதி நியாயமும் அந்த நன்மை செய்த மனிதனானவனுடைய பக்கமே இருந்தது. தன் அயலவனு டைய குற்றத்தை நிரூபிக்க நன்மை செய்த அந்த மனிதனானவனுக்கு வேறே சாட்சிகள் தேவையயாக இரு க்கவில்லை. அந்த அயலவனுடைய தண்டனையானது, இந்த நீதிமானு டைய வாயின் ஒரு வார்த்தையி லே யே தங்கியிருந்தது. ஆனாலும், அவன் தேவனுக்கு பயப்படுகின்ற நீதிம hனாக இருந்ததால், பழி வாங்குவதினால் தன் மாமசத்தில் உண்டாகும் அற்ப கால திருப்தியை விரும்பாமல், தன்னுடைய ஆத்துமாவை மரண கண்ணிக்கு விலகிக் காத்து கொள்ளும்படிக்கும், தன் கைகளை கறைப்படுத்தாதபடிக்கு, அந்த அயலவனுடைய வாழ்க்கையிலே தேவ நீதி நிறைவேறும்படிக்கு அவனை அந்த ஊராரிடம் ஒப்புக் கொடுக் காமல், தேவனாகிய கர்த்தருடைய நீதி நிறைவேறும்படிக்கு இடங் கொடுத்தான். இவ்வண்ணமாகவே அவனுடைய இருதயத்திலே தேவ நீதியை நிறைவேற்றும் வாஞ்சை இருந்தது. அவனுடைய நாவு தேவ நீதியையும் அறிக்கை செய்கின்றதாகவே இருந்தது. அவன் வாழ்வின் வழியாக பிதாவாகிய தேவனே மகிமைப் பட்டார். அவன் நாவிலே உண்டாகும் துதி கருத்துள்தாக இருந்தது. பிரியமானவர்களே, நீதியை நியாயத்தையும் உங்கள் கரங்களிலே எடுத்துக் கொள்ளக்கூடிய சந்தர் ப்பங்கள் உண்டானலும், உங்கள் ஆத்துமாவை வேடனுடைய கண்ணி க்குள் அகப்படுத்திக் கொள்ளாதிருங்கள். அயலவனுக்கு வரும் தண்ட னையில் அக மகிழாமல், அவனுடைய ஆத்தமா இரட்சிப்படைய வேண் டும் என்பதிலேயே கருத்துள்ளவர்களாயிருங்கள். தன்னை சிலுவை யிலே அறைந்த மனிதர்களின் பாவங்களுக்காகவும் தம்மை பலியாக ஒப்புக் கொடுத்த ஆண்டவர் இயேசுவையே தியானம் செய்யுங்கள். கறைபடாத கைகளையுடையவர்களாவும், இருதயத்தில் மாசில்லாதவர்க ளுமாயிருந்து, தேவ நீதியையும், அவருடைய துதியையும் கருத்தோடு அறிக்கை செய்யுங்கள்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, நான் மகா சபையிலே உம்மைத் துதிக்கவும், திரளான ஜனங்களுக்குள்ளே உம் புகழை அறிவிக்கவும் என் ஆத்துமாவை தீமையினின்று விடுவித்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 19:14