புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 23, 2022)

என் ஆத்துமாவின் தாகமும் வாஞ்சையும்

சங்கீதம் 63:1

என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.


ஒரு மனிதனானவன் தூரத்திலுள்ள ஊரொன்றுக்குச் சென்று, அங்கே சுகமாகவும் பாதுகாப்போடும் வாழும்படிக்கு தன் குடும்பத்தாரோடு பஸ் தரிப்பு நிலையத்திற்குச் சென்றான். அந்த ஊருக்கு செல்லும் பஸ் வரு ம்பரை காத்திருக்கும் போது, அங்கு நின்ற சுற்றுலா முகவர்களி லொருவன், வேறொரு பட்டணத்தைப்பற்றி அங்கு நின்றவர்களுக்கு பல தகவல்களை சொல்லிக் கொண்டி ருந்தான். அது என்னவெனில் படிக்கு, அந்தப் பட்டணத்திலே உல்லா சமும், களிப்பும, எண்ணற்ற பொழு போக்குக ளும், தொழில் வாய்புக்களும் உண்டெ னவும், பிள்ளைகளுடைய அபிவிருத் திற்கும் சுகபோக ங்களுக்கும் வானமே எல்லை என்று அந்த சுற்றுலா முகவர் கூறிக் கொண்டிருந்தான். அவன் கூறியதற்கு செவிகொடுத்துக் கொண் டிருந்த அந்த மனித னானவனின் மனதிலே தற்போது பெரும் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. தான் நிச்சயித்திருந்த அந்த ஊருக்கு சென்று அங்கே சுகமாக வாழ்வதா அல்லது அந்த சுற்றுலா முகவர் கூறும் பட்டணத் திற்குச் சென்று களிப்பாக வாழ்வதா என்று இருமனம் உடையவனான். அதனால் அவன் குறிப்பிட்ட ஊருக்கோ அல்லது அந்த பட்டணத்தி ற்கோ செல்லாமல் குழப்பத்தோடு வீடு திரும்பிவிட்டான். பிரியமானவர் களே, ஒருவனுடைய ஆத்துமா இரட்டைப் போக்குடையதாக இருந்தால் அவன் வாழ்வு மிகவும் குழப்பமுடையதாகவும், நோவு பெருத்ததாகவும் இருக்கும். நித்திய வாழ்விற்கு செல்லும் வழியுண்டு அதே வேளை யிலே கேட்டிற்கு செல்லும் வழியுமுண்டு. இந்த இரண்டு வழிகளில் ஒன்றை ஒருவன் தெரிவு செய்ய வேண்டும். ஆண்டவராகிய இயேசுவை நாம் நம்முடைய ஆத்தும நேசராக கொண்டிருந்தால், இந்த உலகமும், அதின் போக்குகளும்;, அந்தப் போக்குகளின் அதிபதியாகிய பிசாசா னவனையும் அவனுடைய ஆலோசனைகளையும் நாம் முற்றிலும் தள் ளிவிட வேண்டும். மாறாக, நாம் நம் வழிகளிலே இருமனமுள்ளவர்க ளாக இருப்போமென்றால், நாம் அனலுமில்லால் குளிருமில்லாமல் வாழும் மனிதர்களைப் போல, பரிதவிக்கப்படுகின்றவர்களாய் இருப்போம். இரு மனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான். அதாவது அவன் எந்த காரியத்திலும் வெற்றிக் கொள்ளப் போவதுமி ல்லை, எதைக் குறித்தும் அவன் மன திருப்தியடையப் போவதுமில்லை. எனவே நம்முடைய ஆத்துமா எப்போதும் அதன் நேசராகிய ஆண்டவர் இயேசுவையே பற்றிக் கொண்டிருப்பதாக. அவராலே நமக்கு மனச் சமாதானமும் திருப்தியும் உண்டாகும்.

ஜெபம்:

நித்திய வாழ்விற்கு என்னை அழைத்த தேவனே, இந்த உலகத்தினால் உண்டாகும் அழைப்புகளுக்கு நான் என் செவியை சாய்க்காகதபடிக்கு, உம்மையே பற்றிக் கொண்டிருக்கிற இருதயத்தைத் தந்தருள்வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:8