புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 22, 2022)

நன்றியும் விசுவாசமும்

பிலிப்பியர் 4:11

நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.


தூரத்திலுள்ள ஒரு குக்கிராமமொன்றிலே ஊழியம் செய்யும்படியாக மிக வும் எளிமையான ஊழியரொருவர் தன் குடும்பத்தோடு மினஷரியாகச் சென்றிருந்தார். கிராமத்தை சுற்றி பார்த்த பின்பு, இராத்திரியிலே படுக் கைக்குச் செல்லும் நேரம் வந்தபோது, அந்தக் கிரமாத்திலுள்ள ஒரு மனிதனானவன் மாலையிலே கொடுத்த மூன்று பாய்கள் மட்டுமே அவ ர்களிடம் இருந்தது ஆனால் தலைய ணை யொன்றும் காணப்படவில்லை. அப்பா, படுக்கைக்கு பாய் இருக்கின் றதே தலையணையொன்றையும் கா ணவில்லையே என்று ஊழியரு டைய மனைவியானவள் ஊழியரிடம் கேட்டாள். அதற்கு அந்த ஊழியரான வர்: படுக்கைக்கு பாயைச் கொடுத்த தேவன் தலைய ணையை கொடு க்கவும் அறிந்திருக்கின்றார் என்று தயவாக பதில் கூறினார். தலைய ணை யை வாங்குவதற்கு அவர்களிடம் பணமோ, அல்லது அந்தக் கிராமத் திலே கடைகளோ இல்லை. ஆனால், தனக்கு இவ்வளவாய் நன்மை செய்த தேவனுக்கு நன்றியிறிதலுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்ற மனநிலையும், தங்களுக்கு தேவையானவற்றை எப்ப டியாவது தேவன் பார்த்துக் கொள்வார் என்ற விசுவாசமுமுள்ள இருதயமுமே அந்த ஊழி யரிடம் இருந்தது. உன்னிடத்தில் இல்லாதது என்ன? என்று ஒருவர் கேட் டுக் கொண்டால், சில வேளைகளிலே மனிதர்களி டத்திலே ஒரு நீண்ட பட்டியல் இருக்கும். நம்மிடத்தில் இல்லாதவை களைக் குறித்து அறிந்தி ருப்பதில் தவறேதுமில்லை. ஆனால் அதற்கு முன்ன தாக நம்மிடத்திலே இருக்கின்றவைகளைக் குறித்த நன்றி நம்முடைய உள்ளத்திலே எப்போ தும் இருக்க வேண்டும். இல்லாதவைகளை குறித்து கவலை கொண்டி ருப்படிருப்பதினால் பலன் என்ன? ஆகையால், என்னத்தை உண் போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவ லைப்படாதிருங்கள். நாளைக்காகக் கவலைப்படா திரு ங்கள்; நாளை யத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளு க்கு அதினதின் பாடு போதும். உங்கள் தேவை என்ன என்று பரமபிதா அறிந்திருக்கிறார். நன்றியறிதலும் விசுவாசமுள்ள இல்லாத வாழ்க்கை யிலே முறுமுறுப்பும், குழப்பமும் இருக்கும் ஆனால் நன்றியறிதலும் விசுவாசமுள்ளமுள்ள இருதயமுள்ளவர்களிடத்தில் மனச் சமாதானமும் திருப்தியும் இருக்கும். எனவே உள்ளவைகளுக்காக நன்றி சொல்லு ங்கள். தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள் அவரே எல்லாம் பார்த்துக் கொள்வார். நம்முடைய பெயர்கள் ஜீவபுத்தகத்திலிருக்கிறதே.

ஜெபம்:

எல்லாம் பார்த்துக் கொள்ளும் தேவனே, எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் நான் மனத்திருப்தியாயிருக்கவும், நன்றயறிதலுள்ளவனாகவும் இருக்கும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்த ருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கி றேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:25-34