புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 21, 2022)

எண்ணிக்கைக்கு மேலான நன்மைகள்

சங்கீதம் 40:5

நீர் எங்கள் நிமித்தஞ் செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது;செய்கையாயிருக்கிறோம்;


ஒரு ஊரின் ஒதுக்கு புறமாக இருந்த காட்டுப் பகுதியிலே, ஒரு சதுப்பு நிலம் இருந்தது. அந்த இடத்திற்கு ஊர் மக்களோ அல்லது வழிப் போக்கர்களோ சென்று ஆபத்திற்குள்ளாகாதபடிக்கு, அங்கே ஒரு எச் சரிப்பின் பலகை போடப்பட்டிருந்து. ஆனாலும் ஒரு மனிதனானவன், அறிந்தோ அறியாமலோ அவ்விடத்திற்கு சென்றபோது, சதுப்பு நிலத் திலே கால்கள் புதைய ஆரம்பித் ததால், அவன் வெளியே வரமுடி யாமல் கூக்குரல் இட்டான். இச் செய்தியானது, அந்த ஊரிலுள்ள தீயணைப்பு படையின் இலாகா விற்கு அறிவிக்கப்பட்ட போது, அவர்கள் தீவிரமாக வந்து, அந்த மனிதனை, சதுப்பு நிலத்திலிரு ந்து எடுத்து விட்டார்கள். அந்த மனிதனான வன் அங்கிருந்தவர்களை நோக்கி: என்னை சேற்றிலிருந்து எடுத்துவிட்டீர்கள் ஆனால் இப்போது சேரும் சகதியும் என்னில் ஒட்டிக் கொண்டிருக்கின்றதே. நான் சேற்றிலேயே மரித்திருந்தால் இந்த அவல நிலைமை எனக்கு நேர்ந்திருக்;காது என்றான். அங்கிருந்தவர்கள் அவனை அருகிலுள்ள கிணற்றிற்கு கொண்டு சென்று, அவனை கழுவி, துடை த்து, அவனுக்கு பதிய வஸ்திரத்தை கொடுத்தார்கள். அதை போட்டுக் கொண்ட பின்னர்: அவன் என் பெலவீPனம் என்னை வாட்டுகின்றது, உட லெல்லாம் குளிர்கின்றது, நான் சதுப்பு நிலத்தில்; மாண்டுபோயிருந் தால் என் பாடுகள் குறைவாக இருந்திருக்கும் என்று கூறினான். ஆனா லும் அவனுக்கென்று துரிதமாக ஆயதப்படுத் தப்பட்டிருந்த தேநீரையும், உணவுகளையும் அவனுக்கு கொடுத்தார்கள். அவன் அதை உண்ட பின்பு, எனக்கு தங்க இடமில்லையே, நான் எங்கே போவேன், நான் மரி த்திருந்தால் நலமாயிருந்திருக்கும் என்று கூறினான். இப்படியாக அவன் வாயிலிருந்து நன்றியற்ற வார்த்தைகயே ஒன்றின்பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தது. பிரியமானவர்களே, சற்று இந்த மனிதனுடைய மன நிலையை குறித்து சிந்தித்துப் பாருங்கள். இப்போது, எத்தனை ஆண்டு களாக உங்களை ஆண்டவராகிய இயேசு வழிநடத்தி வந்திருக்கின்றார் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள். அவருடைய நன்மைகளை உங் கள் கண்முன் கொண்டு வாருங்கள். எத்தனை முறை நன்றிப் பலி உங் கள் இருதயத்திலிருந்து ஏறெடுக்கப்பட்டது? எத்தனை தடவைகள் மன நிறைவுள்ள துதி உள்ளத்தின்; ஆழத்திலிருந்து செலுத்த ப்பட்டது? அவை களை எண்ண முடியுமோ? அல்லது உங்களால் விபரிக்க கூடுமோ? கர்த்தர் செய்த நன்மைகள் எண்ணி முடியாதவைகள்.

ஜெபம்:

சகல ஆசீர்வாதங்களாலும் என்னை ஆசீர்வதித்திருக்கின்ற தேவனே, நீர் செய்த உபகாரங்களை நான் எப்போதும் நினைத்து அவைகளுக்கு நன்றியறிதலுள்ளவனாக வாழ உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 103:1-6