புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 20, 2022)

உருவாக்கும் தெய்வம்

ஏசாயா 64:8

கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.


அநேக ஆண்டுகளாக வீட்டிலே உபயோகித்து வந்த மண்பாண்ட மொன்று உடைந்து போனதால், அந்த வீட்டுக்காரன், இந்தப் பாத்திரம் இனி உபயோகத்திற்கு ஆகாதது என்று அதை வெளியே எறிந்து விட்டான். இந்த உலகிலே இருக்கும் எஜமானன், தன் வேலைக்காரன் தனக்கு இலாபமுண்டாகுபவனாக வும், உபயோகமுள்ளவனாகவும் இரு க்கும் வரைக்கும் அவனை தன்னோடு சேர்த்துக் கொள்கின்ற hன் ஆனால் அந்த வேலைக் கா ரன் எப்போது உபயோகமற்றுப் போகின்றானோ அன்றோடு அவனை தன்னை விட்டு அகற்றி விடுகின்றான். இவை இந்த உல கத்தின் வழக்கம் என்று பொது வாக மனிதர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள். ஆனால் நம்மு டைய பரலோக எஜமானனாகிய ஆண்டவர் இயேசு ஆகாதவனும் உபயோ கமற்றவனும் என்று எவரையும் தள்ளிவிடுவதில்லை. ஆண்டவராகிய இயேசுவின் முதன்மையாக சீஷனாக, பேதுரு என்னும் மனிதன் தெரிந் தெடுக்கப்பட்டான். அவன் ஆண்டவர் இயேசுவை மனதார நேசித்து வந்த போதும், ஒரு நாள் அவனுக்குண்டான பயத்தினால், பலர் முன்னி லையிலே, இயேசுவை நான் அறியேன் என்று மூன்று முறை மறுத லித்தான். தன் எஜமானனை மறுதலிக்கின்றவர்களை துரோகிகள் என்று இந்த உலகிலே தள்ளிவிடுவார்கள். ஆனால், ஆண்டவராகிய இயேசு வோ தன்னுடைய சீஷனாகிய பேதுருவின் பெலவீனத்தை அறிந்த வராய், மறுபடியும் அவனை தேடிச் சென்றார். அவன் மேல் அன்பு கூர்ந்தார். தம்முடைய ஊழியத்தை முன்னெடுத்து செல்லும்படி பேது ருவை தலைவனாக ஏற்படுத்தினார். பிரியமானவர்களே, நம்மை அழைத்த அன்புள்ள தேவனானவர், இந்த உலகத்திலுள்ள எஜமானன் களைப் போல அல்லாது, நாம் நம்முடைய பெலவீனகளினாலே பின் வாங்கி போகும் நேரங்களிலே, நம்மை ஆகாதவர்கள், உபயோக மற்றவர்கள், பாவிகள் என்று நியாந்தீர்த்து, முற்றிலும் தள்ளிவிடாமல் நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராக இருக்கின்றார். எனவே பிரயோஜனமற்றவர்கள் என்று நம்மை நாமே தீர்மானம் செய்யாமல், நாம் நம்மை பிதாவாகிய தேவனிடம் ஒப்புக் கொடுக்கும் போது, அவர் நம்மை மறுபடியும் உடைத்து உருமாற்றி தமக்கேற்ற மேன்மையுள்ள பாத்திரங்களாக வனைகின்றவராயிருக்கின்றார்.

ஜெபம்:

உடைத்து உருமாற்றும் தேவனே, என்னுடைய பெலவீனங்களிலே நான் முற்றிலும் அழிந்து போகதபடிக்கும், உமது மாக மேன்மையான கிருபையினாலே என்னை தாங்கி நடத்துவதற்காக நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 கொரி 4:6-9