புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 19, 2022)

கர்த்தருடைய பாதுகாப்பு

சங்கீதம் 91:11

உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.


முன்னொரு காலத்திலே ஒரு ஊரிலே மிகவும் பராக்கிரமசாலியாகிய சக்கரவத்தி ஒருவன் இருந்தான். அவன் பட்டணங்களையும், தேசங்க ளையும் கைப்பற்றி தான் அடக்கி ஆளுகின்றவனாக இருந்தான். அவன் பல யுத்தங்களை நடப்பித்து, அவன் சென்ற இடமெல்லாம் வெற்றி பெற் றான். ஆனாலும் ஒரு யுத்தமொன்றிலே அவன் காயப்பட்டு மரித்துப் போனான். இப்படியாக இறந்த காலத் திலே நடந்த அநேக புராணக் கதைக ளையும் சில உண்மைச் சம்பவங்களை யும் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். இந்த பூமியிலே இருக்கின்ற எல்லா சரி த்திரங்களுக்கும் தொடக்கமும் முடிவும் உண்டு. அந்தந்த கால எல்லையிலே வாழ்ந்த மனிதர்கள் குறித்த அந்த கால எல்லைக்கு கட்டுப்பட்டிருக்கின்றார் கள். மனுஷனுடைய நாட்கள் புல்லு க்கு ஒப்பாயிருக்கிறது. வெளியின் புஷ;பத்தைப்போல் பூக்கிறான். காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று. அது இருந்த இடமும் இனி அதை அறியாது. மனுஷடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்;. அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம். நாம் ஆராதிக்கின்ற தேவனாகிய கர்த்தரோ சர்வ வல்லமையுள்ளவர். அவர் நேற்றும் இன் றும் என்றும் மாறாதவராக, எப்போதும் இருக்கின்றவராய் இருக்கின் றார். அவருடைய செயல்கள் ஒரு புராணக் கதைகளைப் போல இறந்த காலத்திற்கு உட்பட்டவைகள் அல்ல. அவருடைய வார்த்தைகள் கடந்த காலத்திற்கும், சரித்திரத்திலே காணப்படும் நீதிமான்களுக்கும் மட்டும் உரியதல்ல. கர்த்தருக்கு பயந்து, அவருடைய சமுகத்திலே தங் களை தாழ்த்தி, அவருடைய வழிகளிலே நடக்கின்ற மனுஷருக்கு அவரு டைய வார்த்தைகள் எப்போதும் ஜீவனுள்ளதாக இருக்கின்றது. அதா வது, அவருடைய வாக்குத்தத்தத்தின் ஆசீர்வாதங்கள் எல்லாம் அவர் கள் மேல் என்றென்றைக்குமுள்ளதாக இருக்கின்றது. உன் வழிகளி லெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் அவர் தம்முடைய தூத ர்களுக்குக் கட்டளையிடுவார். பிரியமானவர்களே, கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப்பாளயமிறங்கி அவர்களை விடுவிக் கிறார் என்பது புராணக் கதையல்ல. இது நமக்கு கொடுக்கப்பட்டிருக் கும் தேவனுடைய ஈவு. தேவனுடைய வார்த்தைகளை விசுவாசித்து, அவ ரு டைய சமுகத்திலே நாம் நம்மைத் தாழ்த்தி, அவருடைய வழியிலே நடக்கும் போது, அவருடைய தூதர்கள் நம்மை காத்துக் கொள்வார்கள்.

ஜெபம்:

தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய கிருபையோ உமக்கு பயந்து உம்முடைய வழிகளிலே நடப்பவர்கள்மேல் அநாதியாய் என்றென்றைக்கும் இருக்கின்றது என்பதற்காக நன்றி. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 இராஜாக்கள் 6:16-17