புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 18, 2022)

காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்

சங்கீதம் 37:5

உன் வழியைக் கர்த்தரு க்கு ஒப்புவித்து, அவர் மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய் க்கப்பண்ணுவார்.


யோசேப்பு என்ற வாலிபனானவன் மேல் அவன் மூத்த சகோதரர்கள் பொறாமை கொண்டதினால், அவனை புறக்கணித்து, சந்தர்ப்பம் ஏற் பட்ட போது, அவனை அவ்வழியாக வந்த மீதியானியராகிய வர்த்தக ர்கள் கையிலே அடிமையாக விற்றுவிட்டார்கள். இதனிமித்தம் குற்றம றியாத தங்கள் சகோதரனுக்கு அவனுடைய சகோதரர்கள் அநியாயம் செய்தார்கள். வர்த்தகர்களோ யோசேப்பை எகிப்திற்குக் கொண்டு சென் றார்கள். மீதியானியர் அங்கே யோ சேப்பை எகிப்தின் ராஜாவாகிய பார் வோனின் பிரதானியும் தலையாரிக ளுக்கு அதிபதியுமாகிய, போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள். கர்த்தர் யோசேப்போடே கூட இருந்ததால், அவன் காரியசித்தியுள்ளவனானான்;. அவன் எகிப்தியனாகிய தன் எஜமா ன னுடைய வீட்டிலே அவனுடைய ஊழி யக்காரனாகவும், விசாரணைக்காரனாகவும் இருந்தான். போத்திபாரின் மனைவி தன் புருஷனுக்கு விசுவாசமற்றவளும், துன்மார்க்க சிந்தையுள் ளவளுமாக இருந்தாள். யோசேப்பானவன், அவளுடைய துன்மார்க்க இச்சைகளுக்கு இணங்காதபடியால், அவன்மேல் அநியாயமான பொய் குற்றசாட்டை அவள் சுமத்தினாள். அதனால் அடிமையான யோசேப்பு தான் செய்யாத குற்றத்திற்காக எகிப்திலே சிறைக் கைதியானான். இப் போது அவன் அந்நிய தேசமான எகிப்திலே, அடிமையானவனும், எகிப் தின் பிரதான அதிகாரிக்கு துரோகம் செய்த குற்றவாளி என்று கருத ப்பட்டான். கர்த்தரோ யோசேப்போடே இருந்து, கிருபையினால் அவனை வழிநடத்தினார். கிருபை வைத்தார். சில வருடங்கள் சென்றபின்பு, குறி த்த ஒரு நாளிலே, யோசேப் பானவன், சிறைச் சாலையிலே இருந்து, எகிப்தில் பார்வோனுக்கு அடுத்த அதிபதியாக உயர்த்தப்பட்டான் (ஆதி யாகமம் 37,39,40,41). பிரியமானவர்களே, உங்களுடைய வாழ்க்கை யிலும் கூட தேவனாகிய கர்த்தர் முன்குறித்த காரியத்தை எப்படியும் நிறை வேற்றி முடிப்பார். தடைகள், துன்பங்கள், வேதனைகள், உபத்திர வங்கள் ஏற்படலாம். ஆனால் அவை ஒவ்வொன்றையும் தேவன் நன்மை யாக மாற்றுவார். சொந்த பந்தங்களோ, அதிகாரிகளோ, சன்மார்க்கரோ, துன்மார்க்கரோ, எந்த சூழ்நிலைகளோ எதுவுமே தேவனுடைய திட்டத் திற்கு எதிர்த்து நிற்க முடியாது. எனவே தீமை செய்கின்றவன்மேல் எரிச்சல் கொள்ளாமலும், அநியாயம் செய்கின்றவர்கள் மேல் பொறாமை கொள்ளாமலும், கர்த்தரை நோக்கிக் காத்திருங்கள்.

ஜெபம்:

என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் தேவனே, உம்மேல் நம்பிக்கை வைத்து, நன்மை செய்யவும், உமக்குள்ளே மனமகிழ்ச்சியாயிருக்கவும் எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:4-6