புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 17, 2022)

அதிசயமான தேவன்

தானியேல் 2:20

தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது.


எருசலேமின் மேலும், அதன் குடிகள் மேலும் தேவ நீதியானது நிறை வேறும்படிக்கு, தேவனாகிய கர்த்தர் தாமே அந்த பட்டணத்தை, அழித் துப் போடும்படி, மகா பெரிதும் கெடிதுமான படையயைக் கொண்ட நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவின் கையிலே அதை ஒப்புக் கொடு த்தார். அந்த ராஜாவானவன், தனக்கு சேவை செய்யும்படிக்கு அங்கி ருந்த சில வாலிபர்களையும் சிறை ப்படுத்தி பாபிலோனுக்கு கொண்டு சென்றான். அன்றைய உலகின் ராஜ் யங்கள் எதுவும் எதிர்த்து நிற்கக்கூ டாதபடிக்கு மகா பெரிதான ராஜ்ய த்தை ஆண்ட நேபுகாத்நேச்சார் முன்னி லையில் இந்த வாலிபர்கள் மிகவும் அற்பமானவர்களாக இருந்தார்கள். ஆனாலும், இந்த வாலிபர்களோ, எருச லேமிலே தேவனுடைய சத்தத்திற்கு செவி கொடுக்காமல் பொல்லாப்பு செய்து, தங்கள் இருதயங்களை பல ஆண்டுகளாக கடினப்படித்திய ஜன ங்களைப் போல் அல்லாது, தேவனுடைய பார்வைக்கு செம்மையான தையே செய்து வந்தார்கள். நீங்கள் ஒரு அந்நிய ராஜ்யத்திலே சிறை ப்பட்டு போனால், அந்த தேசத்தின் அதிகாரிகள், குடிகள் மத்தியிலே உங்கள் நிலைமை எப்படி இருக்கும் என்பதை சற்று சிந்தைனை செய்து பாருங்கள். இந்த வாலிபர்களும் அப்படிப்பட்ட நிலைமையிலேயே இருந்து வந்தார்கள். ஆனாலும் இவர்கள், அந்நிய தேசத்திலும் கூட, தேவனுக்கு முன்பாக தங்களை தாழ்த்தி, அவருடைய முகத்தை தேடி னார்கள். அந்த வாலிபர்களில் ஒருவனாகிய தானியேலுக்கு மறைபொ ருளை வெளிப்படுத்தும் வரத்தை தேவன் கொடுத்து, ராஜ சமுகத்திலே அவனை அவர் உயர்த்தினார். அந்த வேளையிலே ராஜாவாகிய நேபு காத்நேச்சார், ராஜ சமுகத்திலே, தான் சிறைப் பிடித்துக் கொண்டு வந்த தானியேலின் முன்பாக முகங்குப்புற விழுந்து, தானியேலை வணங்கி னான். பிரியமானவர்களே, தேவனுடைய அதிசயமான செயலை சிந்தி த்துப் பாருங்கள். அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். எனவே, நீங்கள் எந்த நிலைமையிலே இருந்தாலும், சோர்ந்து போகாதிருங்கள். நம்முடைய தேவனாலே கூடாத காரியும் ஒன்றுமில்லை. அவரை நம்பி, அவர் வழிகளிலே நடக்கின்றவர்களின் காரியத்தை தேவன் வாய்க்கப் பண்ணுவார்.

ஜெபம்:

சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிற தேவனே, நீர் வியக்கத்தகு அதிசயங்களை செய்கின்ற தேவன். உம்மாலே ஆகாத காரியம் ஒன்றுமில்லை. நீர் உம்முடைய பிள்ளைகளுக்கு ஞானத்தையும் வல்லமையையும கொடுக்கிறவராததால் ஸ்தோத் திரம். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 113:7-8