புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 16, 2022)

சகலத்தையும் செய்ய வல்லவர்

யோபு 42:2

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.


எனது தொழில்துறையின் முதலாளியானவர்; தேவ பயம் அற்றவர். யாருக்கும் அஞ்சாதவர், காரியங்களையெல்லாம் தன் இஷ;டப்பபடி செய்பவரும், தன்னுடைய தீர்மானமே இறுதித் தீர்மானம் என நினை ப்பவரும். மிகவும் நன்றாக படித்து, படிப்பில் பாண்டித்தியம் பெற்றவ ருமாவார். அது மட்டுமல்லாமல் மிகுந்த அரசியல் செல்வாக்குமுள்ளவர்; எனவே அவர் சொல்வதை மட்டும் செய்து விட்டு நான் என் பாட்டிற்கே திரும்பி விடுவேன். இப் படிப்பட்டவர்களுக்காக ஜெபிப்பதிலே எந்தப் பலனுமில்லை என்று ஒரு உழைப்பாளியானவன் தன் உள்ளத்திலே தீர்மானம் செய்து கொண் டான். இந்த உழைப்பாளியானவன், சர்வ வல்லமையுள்ள தேவனானவர், தான் செல்லும் ஆலயத்திற்கும், அவரை ஏற்றுக் கொள்பவர்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்டவர் என்ற எண்ணமுடையவனாக இருந்தான். அவன் மட்டுமல்ல, இன்று சில தேவனுடைய பிள்ளைகளும் கூட தங்கள் வாழ்;க்கையிலே சர்வ வல்ல மையுள்ள தேவனை ஆலய வளாகத்திற்கும், தாங்கள் ஜெபிக்கும் ஒரு சில நிமிடங்களுக்கும் மட்டுமே மட்டுப்படுத்தி வைத்துள்ளார்கள். இந்த உலகத்திலே வாழும் பல மனிதர்கள் தேவ பயமற்;றவர்களாக, தேவனை விசுவாசித்து பின்பற்றுகின்றவர்களை அசட்டை செய்து, அகங்காரமான பேச்சுக்களை பேசிக் கொள்கின்றார்கள். ஒரு வேளை இந்த உலகத்தின் முறைமையின்படி அவர்கள் பலத் தவர்களாவும், உலக ஐசுவரியமுடை யவர்களாகவும், உயர்ந்தவர்களாகவும், அதிகாரிகளாகவும், செல்வாக்கு மிக்கவர்களாகவும் இருக்கலாம். ஆனால், இவர்கள் தங்களது மனக்கண் கள் குருட்டாடத்திலே இருக்கின்றது என்று அறியாமல், மதியீனர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். பிரியமானர்களே, பல தேசங்களும், அதன் குடிகளும், வல்லரசுகளை ஆளும் அதிகாரிகளும் தேவனுக்கு விரோத மாக ஆலோசனை பண்ணி, உங்களை மிகவும் அற்பமாக எண்ணினா லும் கலங்காதிருங்கள். தேவனாகிய கர்த்தர் நம்முடைய சார்பிலே இரு க்கும் போது நமக்கு எதிராக எவருமே நிற்க முடியாது. எனவே, எல்லா அதிகாரங்களுக்கும் மேற்பட்டவராகிய நம்முடைய தேவன் கூறுவது போல உங்கள் அதிகாரிகாரிகளுக்குரிய கனத்தை நீங்கள் செலுத்து ங்கள். எந்த சூழ்நிலையிலும், தேவனுக்கு முன்பாக உங்களைத் தாழ் த்தி, அவருடைய சித்தம் நிறைவேற அவருடைய நேரத்திற்காக பொறு மை யுடன் காத்திருங்கள். அப்போது தேவனானவரு டைய கரத்தின் கிரியையைகளை நீங்கள் கண்டு கொள்வீர்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, நீர் எல்லா அதிகாரங்களுக்கும் மேற்பட்டவர் என்பதை உணர்ந்தவனா(ளா)ய், உம்முடைய நேரத்திற்காக காத்திருக்க எனக்கு பொறுமையை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கி றேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 2:1-12