புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 15, 2022)

நீங்கள் தனித்துவமானவர்கள்

1 சாமுவேல் 3:10

அதற்குச் சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்


அன்னாள் என்னும் ஸ்திரி கர்த்தருடைய சந்நிதியில் பொருத்தனை செய்து கொண்ட பிரகாரமாக தன்னுடைய குமாரனை பால்மறக்கப்பண் ணினபின்பு, அந்நாட்களிலே ஆலயத்திலே ஆசாரியனாக இருந்த ஏலி யினிடத்தில் கர்த்தருடைய பணிக்காக கொண்டுவந்து விட்டாள். ஏலியின் குமாரர்கள் ஆசாரிய ஊழியத்திற்கென்று நியமிக்கப்பட்டவ ர்களாக இருந்தும் அவர்கள் துன்மார் க்கமான வாழ்க்கை வாழ்ந்து வந் தார்கள். அவர்கள் கர்த்தரை அறியவில்லை. ஆனால் ஏனெனில் அவர் களோ மத்தியிலே வாழ்ந்து வந்த, அந்தப் பிள்ளையாண்டானாகிய சாமுவேலோ வென்றால், ஆசாரி யனாகிய ஏலிக்கு முன்பாகக் கர்த்த ருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான். ஒருநாள் கர்த்தருடைய வார்த்தை பிள்ளையாகிய சாமுவேலுக்குண்டாயிற்று. கர்த்தர் சாமு வேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்;. அதற்குச் சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான். அதாவது, கர்த்தர் கூறுவதை செய்வ தற்கு அவன் தன்னை ஒப்புக்கொடுக்க ஆயத்தமு ள்ளவனாக இருந் தான். பிரியமானவர்களே, கர்த்தருடைய வார்த் தையை கேட்கும்போது, அதன்படி செய்வதற்கு நாம் மிகவும் அனுபவ மிக்கவர்களாகவோ, கலா சாலைக்கு சென்று வேதத்தை கற்று அதிலே பாண்டித்தியம் பெற்ற வர்களாகவோ நாம் இருக்க வேண்டிய அவசியமில்லை. பிள்ளை யாகிய சாமுவேலைப் போல நாமும், சொல்லும் அடியேன் கேட்கின் றேன் என்று நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும். சாமுவேல் மட்டுமல்ல வேதத்திலே காணும் யோசேப்பு, தானியேல், ஏரேமியா போன்ற தேவ தாசர்களும், சிறு பிராயத்திலேயே கர்த்தர் சொல்வதை செய்ய ஆயத்த முள்ளவர்ளாகவே இருந்தார்கள். நான், சாமுவேல், யோசேப்பு, தானிN யல், ஏரேமியாவை போல அல்ல என்று நீங்கள் கூறலாம். அது உண் மையான கூற்று. நாம் அவர்கள் அல்ல, நாம் கர்த்தருடைய பார்வை யிலே தனித்துவமானவர்கள், விலையேறப்பெற்றவர்கள். அவர்க ளை அழைத்த என்றும் மாறாத தேவனாகிய கர்த்தரே நம்மையும் நித் திய ஜீவனுக்கென்று முன்குறித்து அழைத்துமிருக்கின்றார். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தேவ ஆவியானவரே நமக்குள்ளும் வாசம் பண்ணு கின்றார். அப்படியானால் தேவனுடைய சித்தத்தை நம்முடைய வாழ்க் கையில் நிறைவேற்ற தாமதம் என்ன? சிந்தனை செய்து இன்று கர்த்த ரிடம் பூரணமாக எங்களை ஒப்புக் கொடுப்போமாக.

ஜெபம்:

அநாதி தீர்மானத்தின்படி என்னை அழைத்த தேவனே, நற்செயல்களை செய்ய தேவையான யாவற்றையும் நீர் எனக்கு ஈவாக கொடு த்திருக்கின்றீர் என்பதை உணர்ந்து, தைரியத்துடன் முன்னேறிச் செல்ல கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஏசாயா 43:4-5