புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 14, 2022)

வளர்ந்து பெருகுவோமாக

எபிரெயர் 6:2

பூரணராகும்படி கடந்து போவோமாக.


நம்முடைய ஆண்டவராகிய இயேசு ஒருவரே நம்முடைய வாழ்க் கையிலே எப்போதும் நல்ல மேய்ப்பனாக இருக்கின்றார். ஏனெனில் நல்ல மேய்ப்பனானவன் தன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். நம்முடைய ஆண்டவராகிய இயேசு, நம்முடைய பாவங்க ளை தம்மேல் சுமந்து கொண்டு, நாம் செலுத்தமுடியாதிருந்த பாவ பரிகாரத்தை தாம் ஏற்றுக் கொண்டு, சிலுவையிலே தம்மைப் பலியாக ஒப்புக் கொடுத்தார். அவர் தம் மந்தையிலுள்ள மேய்ச்சலின் ஆடுகளாகிய நம்முடைய நிலைமையை நன்கு அறிந்தவராய், குட்டியை தன் தோள்மீது சுமந்து செல்கின்றார் என்று கடந்த தியா னங்களிலே பார்த்தோம். அதனால் நாம் குட்டியாட்டைப் போலவே எப்போதும் இருந்து விடலாம் என்பது பொ ருள் அல்ல. நம்முடைய உள்ளான மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்க ப்படும்படி ஆண்டவர் இயேசு வழியாக அவரைப் போல மாறும்படி அனுதினமும் நாம் மறுரூபமாக வேண்டும். நாம் எப்போதும் குழந்தைத்தனமுடையவர்களாக இருப்பது தேவனுடைய சித்தமல்ல. நாம் குமாரர்கள் குமாரத்திகளைப் போல் வளர்ச்சியடைய வேண்டும். ஆண்ட வர் இயேசு சொல்லிய வார்த்தைகளைக் கேட்டு, கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள குமாரனைப் போல நாம் மாற வேண் டும். நினையாத நேரத்திலே மறுபடியும் வரவிருக்கும் ராஜாதி ராஜாவா கிய நம் இயேசுவுக்கு எதிர்கொண்டு போக, விழிப்புடன் காத்திருக்கும் புத்தியுள்ள குமாரத்திகளைப் போல மாற வேண்டும். சுவையான பழங்க ளைத் தரும் என்ற எதிர்பார் போடு, நீங்கள் ஒரு மாமரத்தை நட்டால், அந்த மரமானது வளராமல் சிறிய கன்றாகவே இருந்துவிட்டால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? இல்லை. அது வளர்ந்து அதன் பருவ த்தில் பூத்து, சுவையான கனிகளை கொடுக்க வேண்டுமல்லாவா. மரமா னது அதன் கனியால் அறியப்படும். எனவே நம்முடைய வாழ்விலே, நாம் குட்டி ஆடுகளைப் போலவும், சிறிய கன்றுகளைப் போலவும், புத்தியில்லாத குமாரனைப் போலவும், மதியற்ற குமாரத்தியைப் போல வும் இருந்து விட முடியாது. இது கனி கொடுக்கும் காலம். பிரியமான வர்களே, தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கின்றது. அவருடைய தெய்வீக தன்மைகள் ஒரு போதும் மாறிப்போவதில்லை. நாம் அவைகளைப் பற்றியே பேசிக் கொண்டு, ஆவிக்குரிய வளர்ச்சி யற்றவர்களாக தரித்து நிற்காமல், இயேசு கிறிஸ்துவைப் போல பூர ணராகும்படிக்கு நாம் கடந்து செல்வோமாக.

ஜெபம்:

அநாதி தேவனே, உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டீர். நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாய் அனுதினுமும் உமக்குள் வளர கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 25:1-13