புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 13, 2022)

ஆண்டுகளும் அனுபவங்களும்...

சங்கீதம் 32:8

உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.


போதகர் ஐயா, நீங்கள் வயதிலே முதிர்ந்தவர், அனுபவத்திலே தேறி னவர் ஆனால் நானோ சிறுமையும் எளிமையுமானவன். உங்களைப் போன்ற ஆவிக்குரிய முதிர்ச்சி என்னிடம் இல்லை எனவே நான் உங்க ளைப் போல நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் என்னை எதிர் பார்க்க முடியாது என்று ஒரு மனிதனானவன் தன் போகதரிடம் கூறிக் கொண்டான். அதற்கு அவர் மறுமொ ழியாக: மகனே, எனக்கும் உனக்கும் இடையில் 30 வருடங்கள் இடைவெளி உண்டு, ஆனாலும் அந்த இடைவெளி யானது எந்த ஆண்டிலும் மாறிப் போவ தில்லை. நீ என்னைப் போல மாற வேண்டிய அவசியம் இல்லை. நீ ஆண் டவர் இயேசுவை போல மாறும்படிக்வே அழைக்கப்பட்டிருக்கின்றாய். எனக்கு கொடுத்த அதே பரிசுத்த ஆவியானவரை நீயும் பெற்றிருக்கி ன்றாய். நீ எத்தனை வயதுடையவனாக இருந்தாலும், உன் வாழ்க்கை யில் ஏற்படும் ஒவ்வொரு தனிப்பட்ட சூழ்நிலையையும், சவால்களை யும், உன்னைச் சுற்றி நெருக்கும் பாரங்களையும், நீ ஜெயம் கொள்ளு ம்படிக்கு உனக்கு தேவையான பெலத்தையும், உனக்குத் வேண்டிய வழிநடத்துதலையும் தருவது தேவனாகிய கர்;த்தருடைய வாக்குத்தத்த மாக இருக்கின்றது. உன் வயதையும், உன் அனுபவத்தையும் நீ நோக்கிப் பார்க்காமலும், கர்த்தரையே நோக்கிப் பார். கர்த்தருக்கு பயந்து அவர் வழிகளிலே நடந்து கொள். கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார் (சங் 34:7). என்னுடைய வாழ்க்கையிலும் கூட பெலவீனமான நேரங்கள் உண்டு. அந்த வேளைகளிலே நான் என் பெலவீனத்தை நியாயப் படுத் தாமல், என்னை பெலப்படுத்துகின்ற இயேசு கிறிஸ்துவினால் எல்லா வற்றையுமே செய்ய எனக்கு பெலன் உண்டு என்று அறிக்கையிட்டுக் கொள்வேன். இந்த உலகத்திலே பாடுகள் உண்டு, உபத்திரவங்கள் உண்டு ஆனால் அவை எல்லாவற்றையும் ஜெயித்த ஆண்டவாகிய இயேசு நம்மோடு இருக்கின்றார் என்று அந்த மனிதனானவனுக்கு போத கர் அறிவுரை கூறினார். பிரியமானவர்களே, நான் உனக்குப் போதி த்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன் என்ற கர்த்தர் நம்மோடு எப்போதும் இருக்கின்றார். எனவே, அனுபவத்தையும் ஆண்டு களையும் நம்பியிருக்காமல், எப்போதும் நம்மை வழிடத்தி செல்லும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே நாம் நோக்கிப் பார்ப்போம்.

ஜெபம்:

பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர் சொல்லி அழைத்த தேவன் நானே என்று சொன்ன தேவனே, நான் என் ஆண்டுகளையும் அனுபவத்தையும் நோக்கிப் பாரக்காமல் உம்மையே நோக்கிப் பார்க்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஏசாயா 43:2