புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 12, 2022)

தேவ பெலன் எதற்காக?

ரோமர் 6:1

ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே.


ஒரு கிராமத்திலே வாழ்ந்து வந்த மனிதனானவனொருவன், அங்கிருந்த கடையொன்றிலே களவு செய்து அகப்பட்டுக் கொண்டான். அந்த கிராம த்தின் மூப்பர்கள் அவனை விசாரணை செய்தபோது, தன் வாழ்வின் சூழ்நிலையையும், தன்னிடமிருக்கும் மதுபான வெறி கொள்ளும் பழக் கத்தையும் எடுத்துக் கூறி, தன்னுடைய பெலவீனத்தினாலே, இப்படி செய்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என தயவாய் வேண்டிக் கொண்டான். அந்த மூப்பர் சங்கத்தினரும், அவனை கண்டித்து, இனி இப்படி செய்யாதே, நீ போய் உன் பெலவீனத் திலிருந்து விடுத லையை அடையும் வழியை பார் த்துக் கொள் என்று அறிவுரை கூறி அனுப்பிவிட்டார்கள். சில மாதங்கள் சென்ற பின்பு, அவன் மறுபடியும் இன் னுமொரு வீட்டிலே களவு செய்ய முயற்ச்சிக்கும் போது கையும் மெய்யுமாக அகப்பட்டுக் கொண்டான். அவனை மறுபடியும் விசாரணை செய்த போது, முன்பு கூறியது போலவே இது என் பெலவீனம் என்று கூறி அந்த சந்தர்ப்ப த்திலிருந்து எப்படியாவது தப்பித்துக் கொள்ளும் போக்கைத் தேடினான். இந்த மனிதனைக் குறித்து உங்களுடைய அபிப்பிராயம் என்ன? சற்று சிந்தி த்துப் பாருங்கள். நம்முடைய ஆண்டவராகிய இயேசுவும் நம்மு டைய பெலவீன நேரங்களிலே நமக்கு பெலன் தந்து நடத்துகின்றார். இத னால், நான் செய்யும் பாவம் என் பெலவீனம் என்று கூறிக் கொண்டு, அந்த பாவத்திலிருந்து விடுதலையடையாமல் அதிலே நான் வாழ முடி யும் என்பது பொருள் அல்ல. தேவ கிருபை என்றுமுள்ளது. பாவம் பெரு கின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று. ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே. நம்முடைய ஆண்டவராகிய இயேசு, மனிதர்களுடைய எல்லா பாவங்களையும், மற்றவர்கள் காணாதபடி மனி தர்களுக்குள் மறைந்திருக்கும் எல்லா பெலவீனங்களிலிமிருந்தும் தம் மிடம் வருபவர்களை விடுதலையாக்க வல்லவராகவும் கிருபை நிறை ந்தவராகவும் இருக்கின்றார். நமக்கு கொடுக்கப்பட்ட தேவ கிருபையா னது, நம்முடைய பெலவீனங்களை நாம் நியாயப்படுத்தி, பெலவீனங்க ளிலே தரித்து நிற்கும்படி க்கான சாட்டுப் போக்கு அல்ல, பாவிகள் பாவத்தில் வாழும்படிகுமல்ல, அவர்கள் யாவரும் பாவத்திலிருந்து விடுதலையடையும்படிக்காக அவர் மீட்பராக இந்தப் பூமிக்கு வந்தார்.

ஜெபம்:

பெலவீன நேரங்களிலே பெலன் தரும் தேவனே, உம்முடைய நீடிய பொறுமையை நான் அசட்டை செய்து வாழாமல், என் பெலவீ னங்களை ஜெயம் கொண்டு முன்னேறிச் செல்ல கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்

மாலைத் தியானம் - கலாத்தியர் 2:21