புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 11, 2022)

தேற்றும் தெய்வம் இயேசு…

சங்கீதம் 23:4

நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என் னைத் தேற்றும்.


யாக்கோபு என்ற மனிதன், பல ஆண்டுகளுக்கு பின், தன் மனைவி பிள்ளைகள், ஊழியர்கள், மந்தைகள், மிருக ஜீவன்களுடன், பதான் அராம் என்ற இடத்தைவிட்டு, தன் பிதாக்களின் தேசத்திற்குக்குப் புற ப்பட்டுப்போனான். பல ஆண்டுகளுக்கு பின் தன் தமையனாகிய ஏசாவை சந்தித்த போது, அவனோடே சமாதானம் பண்ணிக் கொண்டான். அந்த வேளையிலே ஏசா, யாக்கோபை தன்னோடு கூட வரும்படி அழைத்த தான் அதற்கு யாக் கோபு: பிள்ளை கள் இளம்பிள்ளைகள் என்றும், கற வையான ஆடு மாடுகள் என்னிட த்தில் இருக்கிறது என்றும் ஒரு நாளா வது துரிதமாய் ஓட்டினால், மந்தை யெல்லாம் மாண்டுபோம் எனவே என க்கு முன் நடக்கிற மந்தைகளின் கால் நடைக்கும் பிள்ளைகளின் கால் நடை க்கும் தக்கதாக, மெதுவாய் அவை களை நடத்திக்கொண்டு வருகிறேன் என் றான். இந்த சம்பவத்திலே யாக் கோபு எப்படியாக சிறு பிள்ளைக ளையும் கறவையாடுகளையும் மெது வாக நடத்திச் சென்றான் என்பதை சிந்தித்துப் பாருங்கள். மந்தைகளை மேய்க்கின்றவர்கள், தங்கள் மந்தையிலுள்ள ஆடுகளின் நிலைமையை நன்றாக அறிந்து, அவைகளை மிகவும் கவனமாக நடத்திச் செல்வா ர்கள். நானே நல்ல மேய்ப்பன் என்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறியிருக்கின்றார். அவர் மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிக ளைத் தமது புயத்தினால் சேர் த்து, தமது மடியிலே சுமந்து கறவலாடு களை மெதுவாய் நடத்துவார் (ஏசாயா 40:11). நம்முடைய வாழ்வின் சூழ்நிலைகள் நெறிந்த நாணல் புல்லைப் போல பெலனற்றிப்போய்க் கிடைக்கின்ற போதும், வாழ்க்கையிலே இருள் சூழ்ந்து, இனி என்ன செய்வதென்று வழி தெரியாமல் இருக்கும் போதும், நமக்குள் எரியும் சுடர் மங்கி எரியும் போதும் அவர் நம்மை தள்ளிப் போடாமல், அரவணைத்து, காத்து, தேற்றி, உணர்த்தி நடத்துகின்ற தேவனாயிருக்கின்றார். எனவே, உங்கள் வாழ்விலே எப்படிப்பட்ட எதிரடையான சூழ்நிலைகளை நீங்கள் சந்திக்க நேர்ந்தாலும், ஆண்டவராகிய இயேசுவைவே அண்டிக் கொள்ளுங்கள். அவர் நல்ல ஆயனைப் போல உங்களை தோளிலே சுமந்து வழிநட த்திச் செல்வார்.

ஜெபம்:

என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகின்ற தேவனே, நான் உம்மை பற்றிக் கொண்டிருக்கின்றேன் என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்ச கர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 10:10-15