புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 10, 2022)

வெளிச்சம் உதித்தது

மத்தேயு 4:15

இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது


இயேசு இந்த உலகிலே வாழ்ந்த நாட்களிலே, பிறவிக் குருடனொருவனைப் பார்வையடையும்படி செய்தார். அவன் பிறப்பிலிருந்து குருடனாக வாழ்ந்த பொழுதிலும், ஆண்டவராகிய இயேசுவை கண்டபோது, அவர் தேவனிடத்திலிருந்து வந்த மீட்பர் என்பதை அறிந்து, எந்த தாமதமுமின்றி அவரை விசுவாசித்தான். ஆனாலும் வேத வாக்கி யங்களை கற்று தேர்ந்தவர்களாகிய யூத மதத் தலைவர்களோ மீட்பரை எதிர்பார்த்திருந்தும், மீட்பர் இயேசுவை கண்ட போது அவரை விசுவாசிக்க முடியாதபடிக்கு அவர்களுடைய மனமா னது மிகவும் கடினப்பட்டிருந்தது. அவிசுவாசமான பாவத்தோடு, இன் னும் அதிக கேட்டை தங்களுக்கு தாங்களே உண்டாக்கும்படி, மீட்பர் இயே சுவை கொலை செய்யும்படி அவர்கள் வகை தேடினார்கள். தாங்கள் தெளி வாக யாவற்றையும் காண்கின்றோம் என்று கூறியும், மீட்பர் இயே சுவை யார் என்று கண்டு கொள்ள முடியாதவர்களாக இருந்ததால், அவர்கள் மனம் குருட்டாட்டத்திலே இருந்தது அதனால் அவர்கள் பாவம் நிலை நிற்கின்றது என மீட்பர் இயேசு கூறினார். (யோவான் 9). கண் பார்வை இல்லாமல் இந்த உலகத்திலே வாழ்கின்ற ஜனங்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் இந்த உலகின் காட்சிகளை காணாதபடி அவர்கள் சரீரத்திலுள்ள கண்கள் இருளடைந்திருக்கின்றது. அதனால் அவர்கள் மனக்கண்கள் இருளடைந்திருக்கின்றது என்பது பொருளல்ல. ஆனால் சரீரத்திலுள்ள கண்கள் தெளிவாக பார்வையுடையதாக இருந்தும், மனக் கண்கள் இருளடைந்திருப்பவர்களின் நிலைமையே பரிதாபமானது. ஏனெனில், அவர்கள் நித்திய காரிருளின் ராஜ்யத்திற்குள் அகப்பட்டிரு க்கின்றார்கள். இருளில் இருக்கும் ஜனங்கள் தெய்வீக ஒளியை கண்ட டையும்படி, பிதாவாகிய தேவன்தாமே, தம்முடைய ஒரே பேறான குமா ரன் இயேசுவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். மனிதர்கள் நித்திய மரண இருளில் மாண்டு போகாதாபடிக்கு, நித்திய வாழ்வை பெறும்படி க்கு, தம்முடைய குமாரனாகிய இயேசுவை விசுவ சிக்கின்ற ஒவ்வொ ருவரின் மனக் கண்களையும், தம்முடைய திவ்விய மகிமையுள்ள ஒளியினாலே பிரகாசிப்பிக்கும்படி சித்தமுள்ளவராக இருக்கின்றார். நம்முடைய வாழ்வின் அணையாத தீபமாகிய இயேசுவை நோக்கிப் பார்ப்போம், வெளிச்சத்தின் பிள்ளைகளாக எப்போதும் சுடர் விடுவோம்.

ஜெபம்:

அந்தகார இருளினின்று ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்த தேவனே, நான் என்னுடைய இலக்காகிய பரலோகத்தை மறந்து போகாதபடிக்கு, உம்முடைய திவ்விய ஒளி எனக்கு எப்போதும் வீசச்செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 2:9