புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 08, 2022)

நருங்குண்ட இருதயம்

ஏசாயா 57:15

பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ள வர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.


தாவீது என்னும் இளைஞன், தன்னுடைய தந்தையாருக்கு இருந்த கொஞ்ச ஆடுகளை மேய்த்து வந்தான். தேவனாகிய கர்த்தர் தாமே அவனை தெரிந் தெடுத்து, சமஸ்த இஸ்ரவேலையும் ஆளும் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார். தாவீது, யுத்த வீரனும், இஸ்ரவேலின் ராஜா வும், தேவனுக்கு பிரியமுள்ள துதிகளை ஏறெடுக்கும் துதி வீரனும், தீர் க்கதரிசியாகவும் இருந்தான் (அப் 2:29-30). ஆனாலும், ஒரு சந்தர்பப்த் திலே, தாவீது ராஜா, தன் வாழ் க் கையிலே பெரிதான ஒரு துரோக த்தை செய்து விட்டார். அந்த துரோ கத்தைக் குறி த்து தேவனுடைய தீர்க்கதரிசியாகிய நாத்தான்வேல் தாவீதுக்கு அறிவித்த போது, தேவ னுக்கு விரோதமாக பாவம் செய்;து வழி விலகியதை நினைத்து அவன் உள்ளமோ உடைந்து போயிற்று. அப்பொழுது தாவீது தேவனை நோக்கி விண்ணப்பம் செய்தான். தாவீது ஒரு பெரிய ராஜ்யத்தின் ராஜாவாக இருந்தபோதும், அவனது விண்ணப்பமானது அவனு டைய மனத் தாழ்மையையும், அவன் தேவன் பேரில் கொண்டுள்ள அன்பை யும், மனவருந்துதலையும், மனந்திரும்புதலையும் நன்றாக வெளிக்காட்டி யது. தாவீது கூறிய விண்ணப்பத்தின் சில வார்த்தைகளை நமது சிந்த னைக்கு எடுப்போம். 'தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ் செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித் தேன். என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறை த்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும். தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ;டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தை விட்டு என்னைத் தள் ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக் கொள்ளாமலும் இரும்' என்று விண்ணப்பம் செய்தான். இதுவே உள் ளத்தில் ஏற்படும் உண்மையான மாற்றம். இது நொறுங்குண்டதும் நரு ங்குண்டதுமான தேவனுக்கு ஏற்ற இருதயம். இதை தேவன் புறக்கணி க்கமாட்டார். பிரியமானவர்களே, செய்த குற்றங்களை மறைத்து நியா யப்படுத்தாமல், அவைகளை ஏற்றுக் கொண்டு, நம் தேவனிடத்தில் திரும் புங்கள். நீங்கள் துன்பபடுத்தப்பட்டிலுந்தால், ஆண்டவர் இயேசுவினிடத் திலே உங்கள் மனநோவுகளை தெரியப்படுத்துங்கள். அவர் நம்மை காய ம்கட்டி, தேற்றிக் குணமாக்கி, மனஆறுதல் தந்து வழிநடத்திச் செல்வார்.

ஜெபம்:

நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு சமீபமாயிருக்கும் தேவனே, நான் என் மீறுதல்களை மறைக்காமலும், எனக்கு ஏற்பட்ட துன்பங்களினால் எனது மனம் கடினமடையாமலும் என்னைக் காத்துக் கொள்வீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 34:18