புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 07, 2022)

ஆவியில் எளிமையுள்ளவர்கள்

மத்தேயு 5:3

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.


பொதுவாக, இவ்வுலகத்தில் தரித்திரர் அல்லது ஏழைகள் என்று கருத ப்படுபவர்களை தேவன் விசுவாசத்தில் ஐசுவரியவான்களாக்கியிருக்கின்றார். அதே போலவே பொதுவாக, தேவனை விசுவாசியாதவர்கள், இந்த பூமிக்குரிய ஆஸ்தியைத் தங்களுக்கென்று பெருகப்பண்ணுகிறார்கள் (யாக் 2, சங் 73). அதனால் இந்த உலகிலே இருக்கும் பொரு ளாதார அளவுகோலின்படி தரித்திரர்கள் என்று கூறப்படுகின்றவர்கள் யாவரும் பண ஆசையில்லாதவர்களும், மெய்யான தேவனை விசுவாசிக்கின்றவர்களும், மனத்தாழ்மையுள்ளவர்களும் என்று நாம் கூறமுடியாது. வேத வாக்கியங்கள் கூறுவது போல, பூமியிலே வாழும் பொருளாதார விருத்தியுடைய ஐசுவரியவான்கள் யாவ ரும் மிகவும் விழிப்புள்ளவர்களாக வாழ வேண்டும் அதனால் அவர்கள் எல்லோரும் விசுவாசமற்றவர்களும், பெருமையும் அகங்காரமும் உள்ளவ ர்கள் என்பதும் பொருள் அல்ல. அநே கமாக ஏழைகள் வாழும் கிராமங்களுக்கு சென்று நற்செய்தியை நாம் அறிவிக்கும் போது, அங்கே உள்ள எல்லோரும் ஆண்டவர் இயேசுவை ஏற்றுக் கொள்வதில்லை. அது போலவே, உலக ஐசுவரியமுள்ளவர்கள் யாவருமே இயேசுவை நிரகாரிப்பவர்களும் அல்ல. (லூக்கா 19) நம்முடைய ஆண்டவராகிய இயேசு ஏழைகளை, வறியவர்களை, திக்க ற்ற பிள்ளைகளை, விதவைகளை நேசிக்கின்றார். அதே வேளையிலே அவர் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கின்றார் தாழ்மையுள ள்வர்களுக்கோ கிருபையைப் பொழிகின்றார். கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையான வனையோ தூரத்திலிருந்து அறிகிறார் (சங்கீதம் 138:6). மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் (1 சாமு 16:7). அப்படியானால் ஆவியிலே எளிமையுளள்வர்கள் அல்லது எளிய மனதையுடையவர்கள் யார்? தாங்கள் பாவிகள் என்றும், தங்கள் சுய பெலத்தினாலே தாங்கள் நீதிமானாக முடியாது என்பதை உணர்ந்த வர்கள், மனத் தாழ்மையுள்ளவர்கள், இந்த உலகத்தினாலும் அதன் போக்கினாலும் ஒடுக்கப்பட்டு தங்கள் ஆன்மீக வெறுமையையும், அதன் தேவையையும் மிகவும் உணர்ந்தவர்கள். இந்த உலகத்தினால் உண் டாகும் சுகபோகங்களிலே திருப்தியடையாமல், தேவனுடைய வார்த்தை விழுந்து வளரக்கூடிய பண்படுத்தப்பட்ட நிலத்தைப் போன்ற உள்ள முடையவர்கள். இவர்கள் பாக்கியவான்கள்.

ஜெபம்:

தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையளிக்கும் தேவனே, என் உள்ளம் உமக்கு முன்பாக எப்போதும் ஏற்புடையதாக இருக்கும்படிக்கு, உமது சமுகத்திலே நான் என்னை தாழ்த்தி அர்பணிக்கின்றேன். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 15:1-5