புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 06, 2022)

விடுதலையடைய வழி ஏது?

1 யோவான் 1:9

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்


இந்த உலகிலே மனிதர்கள் செய்த குற்றங்களை விசாரணை செய்து, குற்றம் செய்தவர்களுக்கு, அதற்குரிய அபராதங்களை செலத்தும்படி தீர்ப்புச் செய்வதற்கும் அல்லது தண்டனையை பெற்றுக் கொள்ளும்படி கட்டளை கொடுப்பதற்காகவுமே நீதி மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீதிமன்றங்கள் யாவுமே, மனிதர்களால் மனித முறைமைகளின்படி ஏற்படுத்தப்பட்டு, மனிதர்களால் எழுத ப்பட்ட நீதி நியாயங்களின்படி, மனித ர்களால் நியமனம் பெற்ற சில மனித ர்களால் நடத்தப்பட்டு வருகின்றது. களவு செய்து அதை ஏற்றுக் கொண்ட மனிதனானவனொருவன், தன் குற்றத் தை ஏற்றுக் கொண்டு, நாட்டின் சட்ட த்தின்படி, தன் குற்றத்திற்குரிய தண்ட னை செலுத்தினாலும். அவனது களவு செய்யும் சுபாவத்திலிருந்து யார் அந்த மனிதனை விடுதலையாக்க முடியும்? யார் அந்த மனிதனுடைய பாவத்தை மன்னிக்க முடியும்? முன்னைய நாட் களிலே, விபச்சாரம் செய்து, அகப்பட்டவர்கள் அன்றைய சட்டத்தி ன்படி கல்லெறியப்பட்டு கொலை செய்யபட்டார்கள். தங்கள் குற்றத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டாலும், அந்த பாவத்திலிருந்து அவர்கள் விடுதலையடைய முடியாதிருந்தார்கள். இன்றைய உலகிலே, எந்த ஒரு மனுஷனும், எந்த ஒரு ஸ்திரியும் உடன்பட்டால் அவர்கள் விரும்பய த்தை செய்யலாம், அது அவர்கள் சுதந்திரம் என்று சட்டங்கள் பிறப் பிக்கபட்டுள்ளது. அதாவது துணிகரமான பாவங்களை செய்தாலும் தண் டனையை பெறாமல், பாவத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கும்படி யான சட்டங்கள் பல நாடுகளிலே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு மனிதன் விபச்சாரத்தில் அகப்பட்டு தண்டiனை பெற்றாலும் அல் லது இந் நாட்களிலிருப்பது போல சுதந்திரமாக விபரசாத்தை செய்து வந்தாலும், ஒருவராலும் அந்த பாவத்திலிருந்து அந்த மனிதனுக்கு மன் னிப்பை பெற்றுக் கொடுக்க முடியாது. நம்முடைய ஆண்டவராகிய இயேசு மனித குலத்தின் பாவத்தின் அகோரத்தை தன்மேல் ஏற்றுக் கொண்டு, அதற்குரிய அபராதத்தை தானே செலுத்தினார். அதனால் இயேசுவின் நாமத்தை விசுவசிக்கின்றவர்கள் எத்தனை பேரோ, அத் தனை பேரும், பாவ மன்னிப்பை பெற்று, தங்களை கட்டி வைத்திரு க்கும் பாவ சுபாவத்திலிருந்து விடுதலையைப் பெற்று, பரிசுத்த வாழ்வு வாழும்படிக்கான வழியை உண்டு பண்ணியிருக்கின்றார்.

ஜெபம்:

என்மீது அன்பு கூர்ந்த தேவனே, நான் என்னைத் தாழ்த்தி, என் பாவங்களையும் பெலவீனங்களையும் உம்மிடத்திலே அறிகையிடுகின்றேன், என்னை மன்னித்து விடுதலையாக்கி நடத்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - அப்போஸ்தலர் 10:43