புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 04, 2022)

சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்

பிலிப்பியர் 2:14

ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,


ஒரு ஊரின் திறப்பின் வாசலையும், சுற்றியிருக்கும் அலங்கத்தையும் காவ லைக் காக்கும்படிக்கு, நன்கு பயிற்சி பெற்ற, ஜாமக்காரர்கள் எனப்படும் ஒரு பிரத்தியேகமான குழு நியமனம் பெற்றது. அந்த ஜாமக்காரர்கள், மற்றய மனிதர்களைப் போல, அந்த ஊரிலே வாழ்ந்து வந்த போதும், அவர்கள் பிரத்தியேகமான வேலைக்காக வேறுபிரிக்கப்பட்டார்கள். அவ ர்கள் மற்றய மனிதர்களைப் போல நடந்து கொள்ளாமல், எப்போதும் விழிப்புள்ளவர்களாயும், அந்த ஊரை யும், ஊரின் குடிகளையும், தங்களை யும் பாதுகாக்கும்படி எச்சரிகையுள்ளவ ர்களாகவும் நடந்து கொள்வார்கள். அவர் கள் அந்த ஊர் ஜனங்களைக் காக்கு ம்படிக்கு, அவர்களுக்கு நன்மை செய் யும்படிக்காகவுமே, ஊர் ஜனங்களிலி ருந்து வேறு பிரிக்கப்பட்டார்கள். அது போலவே நாமும் இந்த உலகத்திற்கு ஒளியாக இருக்கும்படி, உலகத் திலிருந்து வேறுபிரிக்கப்பட்டிருக்கின்றோம். இந்த உலக த்திலே வாழ் ந்தாலும், இந்த உலகத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல், அவர்கள் நடுவே நாம் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய சாட்சிகளாக வாழ்வத ற்கு நியமனம் பெற்றிருக்கின்றோம். பூமியிலுள்ளவைகளை யல்ல, கிறி ஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலு ள்ள மேலானவைகளையே நாடுங்கள். எடுத்துக்காட்டாக, உலகின் போக்கி ன்படி, விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை, கோபம், மூர்க்கம், பொறாமை, தூஷணமான வார்த்தை கள் போன்ற இன்னும் பல மாம்சத்தின் கிரியைகள் இந்த உலகத்திற்கு ரியவைகளாக இருக்கின்றது. அவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்வது மட்டுமல்லாமல், நாட்டின் சட்டங்களாகவும் மாற்றி வருகின்றார்கள். இப் படியான கோணலும் மாறுபாடான உலகத்தின் மத்தியிலே, நம்மை நாம் கறைப்படுத்திக் கொள்ளாமல், அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க, இருளில் பிரகாசிக்கும் ஒளிச்சுடராக, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்க மாகிய ஆவியின் கனியை தரித்தவர்களாக, வாழும்படியான அழைப் பைப் பெற்றிருக்கின்றோம். ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறது போல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கட வோம். எனவே, நாம் உலகத்திற்கு புறம்பானவர்களாக இருந்தாலும், உலகத்தாரால் பைத்தியங்களென்று எண்ணப்பட்டாலும், நாம் நம்மில் உண்டாயிருக்கும் ஜீவ ஒளியை மறைத்து வைக்கக் கூடாது.

ஜெபம்:

நீங்களே உலகத்தின் ஒளியாக இருக்கின்றீர்கள் என்று கூறிய தேவனே, இந்த உலகத்திலுண்டான இருளோடு நாம் ஐக்கியப்படாமல், இருள் நீக்கும் ஒளியாக இந்த உலகிலே சுடர்விட கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:33