புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 03, 2022)

தேவனுடைய வீட்டார்

ரோமர் 8:17

நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே;


கடந்த நாளிலே தியானம் செய்தது போல நீங்கள் இந்த உலகத்திலே வாழ்ந்தாலும் இந்த உலக போக்கிற்கு உட்பட்டவர்கள் அல்லவே. 'பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி, புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங் கள் நற்கிரியைகளைக் கண்டு அவற் றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங் கள் அவர்களுக்குள்ளே நல்நடக் கை யுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்தி சொல்லு கிறேன்.' என்று பரிசுத்த வேதாகமம் அறிவுரை கூறுகின்றது. அதாவது, நாம் பாவத்திற்கு அடிமைகளாயிருந்த காலத்திலே, தேவனுடைய நீதிக்கு புறம்பானவர்களாக இருந்தோம் ஆனால் இப்போதோ பாவத் தினின்று நாம் விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய நீதிக்கு உட்பட்ட வர்களாகப்பட்டிருக்கின்றோம். மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் தேவன்தாமே நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார். எனவே நாம் அக்கிரமத்தை நடப்பிக்கின்ற வர்களோடு இசைந்திருக்காமல், அவர்களுடைய துன்மார்க்கமான கிரியைகளுக்கு அந்நியரும் பரதேசிகளுமாய் இருக்கும்படிக்கு, சத்திய ஆவியானவர்தாமே நம்மை வழிநடத்தி செல்கின்றார். அதுமட்டும ல்லாமல், நாம் இனி தேவனுடைய ராஜ்யத்திற்கு அந்நியரும் பரதேசிக ளுமாயிராமல், சகல பரிசுத்தவான்களோடேகூட, ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருக்கும்படியான சிலாக்கித்தைப் பெற்றிரு க்கின்றோம். ஒரு குமாரனுக்கு அவனுடைய தகப்பன் வீட்டிலே, சுதந்தி ரமும், உரிமையும், பாதுகாப்பும் உண்டு. அதைப் போலவே நாமும் பிதாவாகிய தேவனுடைய பிள்ளைகளாக இருப்பதினாலே, உன்னதங்க ளிலே உள்ள சகல ஆசீர்வாதங்களுக்கும் நாம் உடன் சுதந்திரராகும் சிலாக்கியத்தை பெற்றிருக்கின்றோம். ஆம் பிரியமானவர்களே, இந்த சிலாக்கியம் பெரிது. பிதாவாகிய தேவனுடைய அநாதி தீர்மானமானது நம்மில் நிறைவேறத்தக்கதாக, நாம் உலகத்தின் போக்கிற்கு நம்மை ஒப்புக் கொடுக்காமல், தேவனுடைய வீட்டாராருக்குரிய சுபாவங்களை தரித்தவர்களாக, அவைகளிலே வளர்ந்து பெருகின்றவர்களாக இந்த உலகத்திலே வாழக் கடவோம்.

ஜெபம்:

கிறிஸ்துவுக்கும் நம்மை உடன் சுதந்திரராகும்படி அழைத்த தேவனே, என் சொல்லிலும், செயலிலும், சிந்தனையிலும், உலக போக்கிற்கு அந்நியராக வாழும்படிக்கு பெலன் தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 103:10-12