புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 02, 2022)

நான் எதற்கு அந்நியனாக இருக்கின்றேன்?

1 கொரிந்தியர் 15:48

வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே.


ஒரு மனிதனானவன், தான் பிறந்து வளர்ந்த தேசத்தைவிட்டு, இன்னு மொரு தேசத்திற்கு சென்று குடியேறினான். அவன் புதிதாக குடியேறி வாழ்ந்து வரும் தேசத்தின் குடியுரிமையை பெறும்வரைக்கும் அவன் அந்த தேசத்தின் குடியுரிமைகளுக்கும் சலுகைகளுக்கும், அந்நியனாகவோ அல்லது புறதேசத்தவனாகவோ (Alien) கருதப்படுவான். அவன் குடியேறிய தேசத்திலே, குடியுரிமையை பெற்றுக் கொள்ளும் நாளிலே, அவன் விட்டு வந்த தேசத்திற்குரிய குடியுரிமையை விட்டுவிடுவதால் தான் பிறந்து வளர் ந்த தேசத்தின் குடியுரிமையகளுக்கு அந்நியனாக மாறிவிடுகின்றான். அது போலவே, நாம் முன்பு கிறிஸ்துவைச் சேராதவர்களும், அவருடைய ராஜ்யத்திற்கு அந்நியர்களும் பரதேசிகளுமாகவும், தேவனற்றவர்க ளாகவும் அலைந்து திரிந்தோம். அதனால் நமக்கு உண்டாயிருந்த உரி மைகள் என்ன? அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்க ளாயிருந்தோம். அறிந்தோ அறியாமலோ, இவ்வுலக வழக்கத்திற்கேற்ற படியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளாகவும், மாம்ச இச்சையின் படியே நடந்து, மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவ த்தினாலே மற்றவர்களைப்போல கோபாக்கினையின் பிள்ளைகளாயி ருந்தோம். ஆனால், தேவனுடைய ஈவு நமக்கு வெளிப்பட்ட போது, இயேசு கிறிஸ்து வழியாக, கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிப்பை பெற்ற நாளிலே, நாம் இந்த உலகத்தின் குடியுரிமையை துறந்து, பரலோகத்தின் குடியுரிமையைப் பெற்றுக் கொள்ள தகுதியுள்ள வர்களாக்கப்பட்டோம். அந்த நாளிலே நாம் இந்த உலக போக்கிற்கு அந்நியர்களும் பரதேசிகளுமாக மாற்றப்பட்டோம். இனி இந்த உலகத் தின் குடியுரிமையினால் உண்டாகும் கேட்டிற்கு நாம் பங்காளிகள் அல் லவே. இந்த உலகிலே, சில மனிதர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளின் குடியுரிமையை வைத்திருப்பது போல, நாம் பரலேகத்தின் குடியுரிமை யையும், இந்த உலகத்தினால் எமக்கு உண்டாயிருந்த குடியுரிமையை யும் வைத்திருக்க முடியாது. அதாவது, பரலோகத்திற்குரியவர்கள் பூமிக்குரியவைகளை நாடித் தேடி, உலக போக்கிலே தங்கள் மனதும் மாம்சமும் விரும்பியதை செய்து வாழ்வதில்லை. பரலோகத்திற்குரியவ ர்கள் இந்த உலகிலே வாழ்ந்தாலும், அவர்கள் பரலோகத்தின் மேன்மை யான வழிகளு க்குட்பட்டவர்கள். மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்க ளும் அப்படிப்பட்டவர்களே வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே.

ஜெபம்:

பரலோக தேவனே, மண்ணானவனுக்குரிய பழைய மோசம் போக்கும் பாவ இச்சைகளை வீட்டு, வானவருடைய மேனியைத் தரித்துக் கொள்ளும்படிக்கு, பரலோக மேன்மைகளை நாடித் தேட கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - கொலோ 3:1-2