புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 01, 2022)

நாம் ஆராதிக்கும் தேவன்

ரோமர் 2:6

தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.


நம்முடைய தேவன் பரலோகத்திலிருக்கின்றார். அவர் வானத்தையும், பூமியையும், அதிலுள்ள யாவையும் தம் வார்த்தையால் உருவாக்கிய சர்வ வல்லமையுள்ளவரும், மகா பரிசுத்தரும், நீதியுள்ளவரும், நிகரில் லாதவரும், அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், ஒரு வராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண் ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவரு மாயிருக்கிறவர். அவர் ஆதி அந்த மில்லாத அநாதி தேவன், இருந்தவ ரும், இருக்கின்றவரும், இனிமேல் வருகின்றவருமாயிருக்கின்றார். அவர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமு ள்ளவர். தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத் தது தடைபடாது. அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். உன்ன தங்களிலே வாசம் செய்யும் இந்த தேவன், நம்முடைய தகப்பனானர். வர்ணிக்க வார்த்தைகள், போதாத, தன்மையுள்ளவரும், ஒப்பற்ற ஒரே தேவனுமாயிருக்கின்றவரின் பிள்ளை களென்று நாம் அழைக்கப்படுவதினாலே, அவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்;. நெருக்கங்களும் சவால்களும் சூழ்ந்திருக்கும் இந்த உலகிலே, உங்கள் மனதை சோர்ந்து போகவிடா திருங்கள். ஆராய்ந்தறிய முடியாத செயல்களை செய்கின்றவர் நம் மோடு இருக்கின்றார் என்பதை உணர்ந்து கொள்ளமுடியாதபடிக்கு தடை செய்வது நம்முடைய அவிசுவாசமே. கடை யாந்தரங்களைச் சிருஷ;டி த்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துN பாவதுமில்லை, இளைப்ப டைவதுமில்லை. இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியா தது. கர்த்தருடைய கை குறுகிப் போகவுமில்லை. கேட்கக்கூ டாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவு மில்லை. பிரியமானவர்களே, வானம் பூமி படைத்தவருடைய பிள்ளைக ளாகிய நீங்கள் வெள்ளம் போல் சத்துரு வரும்போது, சற்று தரித்திரு ந்து மேற்கூறப்பட்ட வார்த்தைகளை சற்று தியானியுங்கள், வாயினாலே அறிக்கையிட்டு சர்வ வல்லவரைத் துதியுங்கள், திடன் கொள்ளுங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள். சோர்ந்து போகாமல் நற்கிரியைகளை நடப்பியுங்கள். கர்த்தருடைய ஆவியானவர் நம்மை எதிர்த்து வரும் சத்துருவானவனுக்கு விரோதமாய்க் வெற்றி கொடியேற்றுகின்றவரா யிருக்கின்றார்.

ஜெபம்:

உன்னதங்களிலே வாசம் செய்யும் பரிசுத்தமானவரே, நீர் யார் என்பதையும், நீர் எனக்கு கொடுத்த மகத்துவமுள்ள பதவியையும், நான் தாழ்மையோடு அறிக்கையிட்டு, உலகத்தை ஜெயங்கொள்ள வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 கொரி 16:13