புதிய நாளுக்குள்..

தியானம் (தை 31, 2022)

காரியம் தேவனால் கைகூடும்

நெகேமியா 6:16

இந்தக் கிரியை எங்கள் தேவனால் கைகூடி வந்ததென்று அறிந்தார்கள்.


உயர்கல்வி கற்கயிருக்கும் ஒரு வாலிபனானவன், பொறியியலாளராக வர வேண்டும் என்ற நோக்கத்துடன், கணிதம் சம்பந்தமான பாடங் களையே தெரிந்து கொண்டான். நாட்கள் கடந்து செல்லும் போது, கணித பாடமொன்றிலே வரும், அத்தியாயங்களும், கணக்குகளும், சூத் திரங்களும் மிகவும் கடிமாகிக் கொண்டே சென்றது. விரக்தியடைந்து போகக்கூடிய நிலையிலே, அவன் தன் ஆசிரியரை அணுகி, இந்த பாடம் வர வர மிகவும் கடினமாகவே போய்க் கொண்டிருக்கின் றது, கணக்குகளை செய்து முடிப்பது இயலாத காரியமாக இருக் கின்றது என கூறினான். அதற்கு அந்த ஆசிரியர் மறுமொழியாக: மகனே, கணித பாடத்தை நீ உயர் கல்வியில் கற்றுக் கொள்ளும்ப டிக்கு தெரிந்து கொள்ளும் போது, உன்னுடைய எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது. நீ ஆரம்ப வகுப்பில் படித்த பாடங்கள் போல இருக்கும் என்று நினைத்தாயோ? நேரத்தை ஒதுக்கி, கற்றவைகளை மீள்ஆய்வு செய்து, உதவிகளை நாடி, கற்றுக் கொள். நீ ஒரு சிறந்த பொறியியளாலராக வருவாய் என்று உற்சாக ப்படுத்தினார். அவனும் ஆசிரியரின் அறிவுரையை கேட்டு அதன்படி நடந்து கொண்டான். சில மாதங்களுக்கு பின், எவ்விதமான கணக்கு களை அவனுக்கு கொடுத்தாலும், அவன் அதை குறித்த நேரத்திற்குள் செய்து முடிக்கும் ஆற்றலுள்ளவனானான். பிரியமானவர்களே, ஆண்டவர் இயேசு வழியாக இரட்சிப்பபை பெற்று கொண்ட நீங்கள், பரலோக த்தை நோக்கி யாத்திரை செய்து கொண்டிருக்கின்றீர்கள். இந்த கோணலும் மாறுபாடுமான இந்த உலகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கும் உங்க ளின் எதிர்பார்வு என்ன? உங்கள் மனதிலும், வீட்டிலும், பாடசாலையிலும், வேலையிடங்களிலும், உறவினர் நண்பர்கள் மத்தியிலும்;, சமு கத்திலும், சபையிலும் எப்போதும் மெல்லி தென் றல் காற்று வீசிக் கொண்டிருக்கும் என்ற எதிர்பார்க்க முடியுமோ? நீங்கள் முன்னெடுக்கும் ஒவ்வொரு நன்மையான காரியத்தையும் செய்து முடிப்பதற்கு பல சவால்களையும், எதிர்ப்புக்களையும் சந்திக்க நேரிடும். எருசலேம் அலங்கத்தை கட்டி முடிக்க, நெகேமியாவிற்கு 52 நாட்கள் சென்றது. ஆனால் அவர்களுக்கு எத்தனையோ எதிர்ப்புகள் தடையாக வந்த போதும், சோர்ந்து போகாமல், கர்த்தரை நம்பி கிரியை செய்தார்கள். எதிரிகள் ஏமாற்றமடைந்து, மிகவும் மனமடிவடையத்தக்கதாக, வேலை நிறைவேறி முடிந்தது. அப்போது, இந்தக் காரியம் கர்த்தரால் கைகூடியது என்று எதிரிகளும், புறஜாதிகளும் அறிந்து கொண்டார்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, என் சுய பெலத்ததை நம்பி, பிரச்சனைகளைக கண்டு நான் சோர்ந்து போகாமல், உம்மால் எல்லாம் கூடும் என்ற நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்ல கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 40:1-5