புதிய நாளுக்குள்..

தியானம் (தை 30, 2022)

மனக் கண்கள் தெளிவடையட்டும்

எபேசியர் 5:17

ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர் த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.


நெகேமியா என்னும் செய்து வந்த தேவ பணியை மும்முரமாக எதிர்த்து நின்றவர்களில் அந்நிய வழிபாட்டுமுறைகளையுடைய தொபியா ஒருவ னாக இருந்தான். அந்த நாட்களில் யூதாவிலுள்ள பெரிய மனிதரிடத்திலி ருந்து தொபியாவுக்குப் போகிறதும், தொபியாவினிடத்திலிருந்து அவ ர்களுக்கு வருகிறதுமான கடிதங்கள் அநேகமாயிருந்தது. ஏனெனில், தொபியாவும், அவனுடைய குமாரனும் யூதர்களோடு திருமண சம்பந்தம் கல ந்திருந்தார்கள். அதனால் யூதாவில் அநேக தேவ ஜனங்கள் எதிரியாகிய தொபியாவுக்கு ஆதரவு வழங்குவதெ ன்று ஆணையிட்டுக் கொடுத்திருந்தா ர்கள். (நெகேமியா 6:18-20). எப்படி யாக தேவனுடைய ஜனங்கள் என்று அழைக்கப்பட்ட அநேகர், தங்கள் தேவ னுடைய பணிக்கே சத்துருவானார்கள் என்று பாருங்கள். சிறையிருப்பின் நாட்களிலே, தேவனைக் குறித்தும், அவருடைய பிரமாணங்களைக் குறித்தும், எருசலேம் தேவாலயத்தைக் குறித்தும் அக்கறையற்றவர்களாக இருந்தால், இந்த நிலை அவர்களு க்கு ஏற்பட்டது. சில வேளைகளிலே சில மனிதர்கள், ஏதோ காரணத்தி னால், தேவனைவிட்டு தூரம் செல்லும்படிக்காக, ஆலயத்திற்கு செல் வதை நிறுத்திவிடுகின்றார்கள. வேதாகமத்தை தியானிப்பதையும், ஜெபி ப்பதையும் நிறுத்தி விடுகின்றார்கள். அதனால், தாங்கள் தேவனுடைய கட்டுப்பாட்டைவிட்டு, இன்னுனொரு உலகத்திற்கு சென்றுவிட்டோம் என்று எண்ணிக் கொள்கின்றார்கள். சரீரத்திலே பெலனும், வாழ்க்கை யிலே தென்றலும் வீசும் காலத்திலே தங்களுக்கு இஷ;டமானபடி தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்கின்றார்கள். எடுத்துக்காட்டாக, லோத்து என்னும் நீதிமானுடைய ஆஸ்தி மிகுதியாயிருந்தபடியால், அவன் வாழ் வதற்காக ஒரு இடத்தை தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. சோதோம், கொமோரா செழிப்புள்ளதாக கண்டு அதற்கருகே குடியேறினான். முடி விலே அக்கிரம் மிகுதியாக அந்த பட்டணங்கள் முற்றாக அழிக்கப்பட்ட போது, அவனுடைய ஆஸ்திகள் யாவும் அவன் இழந்து போனான். பிரி யமானவர்களே, எங்கள் வசதிகளைப் பார்த்து வாழ்க்கை அமைத்து விட்டு, பின்பு தேவனுடைய சித்தம் செய்யும் வழியைத் தேடுவோம் என்பது மதியீனம். தேவனுடைய சித்தத்தின் வழியிலே வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம் என்பதே ஞானம். தேவ பிரமாணங்களுக்கு அப்பாற்பட்ட சம்பந்தங்கள் தேவ பிள்ளைகளையும் தேவனுடைய பணி க்கு எதிராளிகளாக மாற்றிவிடும்;.

ஜெபம்:

பிதவாகிய தேவனே, உமக்கெதிராக பாவம் செய்யாதபடிக்கு, உம்முடைய சித்தத்தின்படி என் வாழ்வை நான் அமைத்துக் கொள்ளும்படிக்கு ஞானமுள்ள இருதயத்தை தந்த என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக் கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஒசியா 14:9