புதிய நாளுக்குள்..

தியானம் (தை 29, 2022)

பிரவினையின் நடுச்சுவர்

ஏசாயா 59:2

உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது;


பிதாவாகிய தேவனுடைய பாதுகாப்பு எப்போதும் அவருடைய பிள்ளை ளுக்குரியதாகவே இருக்கின்றது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரும், தம்முடைய உண்மையை காக்கின்றவருமாயிருக்கின்றார். அப்படியானால், தேவனுடைய பாதுகாப்பிலிருந்து எப்படியான ஒருவன் தன்னை அகற்றிக் கொள்ள முடியும்? அவன் பாவம் செய்வததினாலே, தன்னையே தான் தேவனுடைய பாதுகாப்பிலிருந்து தூரப்படுத் திக் கொள்கின்றான். மோவாப் தேசத்தின் ராஜா, தேவ ஜனங்க ளைக் குறித்து பயமடைந்ததி னால், பிலேயாம் என்னும் மனி தனுக்கு வெகுமதிகளைக் கொடு த்து, நீ போய், தேவ ஜனங்களை சபித்து விடு என்று அவனை மூன்று முறை அனுப்பினான். தேவ ஜனங்களை சபிக்க சென்றவன், தேவனுடைய கரம் அவர்கள் மேல் இருந்ததால், மூன்று தடவைகளும் அவர்களை சபிக்க முடியாமல், ஆசீர்வதித்துவிட்டு திரும்பினான். ஆனா லும், தேவ ஜனங்கள், தேவனுடைய கரத்தைவிட்டு அகற்றும்படிக்காய் அவர்களை தேவனுக்கு விரோதமாக பாவம் செய்ய வைக்கும்படி ஆலோ சனை கூறினான். அந்தப்படியே, மோவாப்பின் ஸ்திரிகள் தேவனுடைய ஜனங்களின் பலரை மோக பாவத்திற்குட்படுத்தி, அந்நிய விக்கிரகங் களை சேவிக்கும்படி பின்வாங்கச் செய்தார்கள். இதனல் தேவனுடைய கோபம் தேவ ஜனங்கள் மேல் மூண்டது. நெகேமியாவின் நாட்களிலும், அவனுடைய எதிரிகள், யூத ஜனங்களில் சிலரை தம்வசப்படுத்தி, நெகே மியாவிற்கு நன்மை செய்வது போல, எதிரிகள் உம்மை கொன்றுபோடா தபடிக்கு, நீர் போய் தேவ ஆலயத்திற்குள் ஒழித்துக் கொள்ளும்படிக்கு துர்ஆலோசனை கொடுத்தார்கள். நெகேமியா தன் உயிருக்கு பயந்து அவர்கள் ஆலோசனைப்படி செய்து பாவங் கட்டிக்கொள்ளுகிறதற்கும், அவரை பின்பற்றும் ஜனங்கள் மத்தியில் அவரை நிந்திக்கத்தக்க அபகீர் த்திக்கு முகாந்தரம் உண்டாக்குகிறதற்கும் அவனுக்குக் கைக்கூலி கொடு த்திருந்தார்கள். பிரியமானவர்களே, இன்றைய நாட்களில் ஒரு வேளை நீங்கள் பாவம் செய்வதற்கு பணம் கொடுக்காதிருக்கலாம் ஆனால் தேவ னுடைய பிரமாணங்களை நீங்கள் மீறி சமரசமாக வாழ்க்கை வாழும்படி துர்ஆலோசனையை, நல்ஆலோசனையைப் போல கூறுவார்கள். உங் கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவரு டைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது என்று கர்த்தர்; கூறுகின்றது. எனவே இப்படிப்பட்ட கண்ணிக்குள் விழுந்துவிடாதிருங்கள்.

ஜெபம்:

பரிசுத்த வாழ்வு வாழும்படி அழைத்து தேவனே, நான் உமக் கெதிராக பாவம் செய்து உம் சமுகத்iவிட்டு தூரம் போகாதாபடிக்கு, என்னை நீர் சோதனையில் நின்று விடுவித்தருளும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 1:17