புதிய நாளுக்குள்..

தியானம் (தை 28, 2022)

பயப்படாதே, திகையாதே,

ஏசாயா 41:10

நீ பயப்படாதே, நான் உன்னு டனே இருக்கிறேன்; திகை யாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்


சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன், ஒரு வீட்டின் பின்புறத்திலே மண் அடுப்பு ஒன்றை அமைக்குமாறு, ஒரு வீட்டார், ஊரலிருந்த ஒரு பெண்மணியை வேலைக்கு அமர்த்தினார்கள். அவள் ஒப்பந்தம் செய்த படி, இரண்டு அடி உயரமான மேடையொன்றை கட்டி, அதன்மேல் நேர்;த்தியாக அடுப்பை கட்டி முடித்தால். சில கிழமைகள் சென்ற பின்பு, அந்த ஊரிலிருந்து வெகு தூரத் திலே இருக்கும் ஒரு தேவ ஊழி யர், அந்த வீட்டிற்கு சென்று ஜெபிக்கும்படியாக தேவ ஆவி யினாலே உந்தப்பட்டார். ஒரு சனி காலையிலே அவர், அந்த வீட்டிற்கு சென்று ஜெபித்துக் கொண்டிருக்கும் போது, அந்த வீட்டிலே ஒரு மேடையான இடம் இருக்கின்றது என்றும் அதை உடைக்குமாறு ஒரு தரிசனம் கண்டார். அந்த வீட்டாரும், அந்த மேடை யாக கட்டப்பட்ட அடுப்பையும், அந்த மேடையையும் உடைத்தார்கள். யாவரின் ஆச்சரியத்திற்கும் ஒரு மண்சட்டிக்குள், தீவினைகள் செய்யப் பட்டு, அங்கே வைக்கப்பட்டிருந்தது. அந்த ஊழியர் அதை அந்த இடத் திலிருந்து அகற்றிவிடும்படி கூறி, வீட்டாரை ஆசீர்வதித்து ஜெபித்து விட்டு தன் ஊருக்கு திரும்பினார். சில நாட்களுக்கு பின்னர், அந்த அடு ப்பை கட்டிய பெண்மணி அவ்வழியாக வந்து, இப்படிப்பட்ட தீமையான காரியத்தை செய்யும்படி, அந்த அயலிலுள்ள ஒரு பொல்லாங்கு செய் யும் மனிதன் கூலி பொருந்தினான், அதனால் நான் அதை செய்தேன் என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். பிரியமானவர்களே, இவ்வண் ணமாக நமக்கு தீங்கு செய்வதற்கும் மனிதர்கள் கூலி பொருந்திக் கொண்டால் அதைக் கண்டு ஆச்சரியப்படாதிருங்கள். நெகேமியாவின் நாட்களிலே, அவனுக்கு தீங்கு செய்யும்படிக்கு, பொய் தீர்க்கதரிசனம் சொல்லும்படிக்கு, அவன் எதிரிகள் கூலி பொருந்தியிருந்தார்கள். நம்மு டைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை காட்டுக் கொடுக்கும்படி அவருடைய சீஷனாகிய யூதாசுக்கு 30 வெள்ளி காசு கொடுப்பதாக யூத மதத்தலைவர்கள் கூலி பொருந்தினார்கள். பிரியமானவர்களே, உங் களை நோக்கும் எதிரியின் கண்முன்னே பயப்படாதிருங்கள். பிதாவா கிய தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு மட்டும் கருத்துள்ள வர்களாயிருங்கள். உங்களோடு போராடினவர்களைத் தேடியும் காணாதிரு ப்பீர்கள். உங்களுளோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள். தேவன் தம் நீதியின் வலக்காரத்தால் தாங்குவார்.

ஜெபம்:

ஜெயங் கொடுக்கும் தேவனே, வெள்ளம்போல் சத்துரு வரும் போது, உம்முடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார் என்ற வாக்குத்தத்த்திற்காக நன்றி. இரட்சகர் இயேசு வழியா க ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஏசாயா 35:1-4