புதிய நாளுக்குள்..

தியானம் (தை 27, 2022)

கர்த்தர் என் கேடகமுமாயிருக்கிறார்

ரோமர் 8:33

தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர் களை நீதிமான்களாக்குகிறவர்.


உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பத்திற்கு, குற் றஞ்சாட்டுகிறவன் என்று இன்னுமொரு பெயர் அவனுக்கு கொடுக்கபட்டிருக்கின்றது. அவன் இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்மு டைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன். (வெளி 12:9-10). அவனே நம்முடைய எதிராளியாக இருந்து தன்னுடைய ஊடகங்களாகிய சில மனிதர்கள் வழியாக நம்மை குற்றஞ்சாட்டுகின்றவனாவும் இருக்கின்றான். நெகே மியா என்னும் தேவ ஊழியர், எரு சலேம் மதிகளை கட்டி முடிகின்ற நாட்கள் நெருங்குகின்ற போது, தங்கள் சூழ்ச்சிகள் ஒன்றும் பலனலிக்கவில்லை என்று அறிந்த போது, அவனுடைய எதிரிகளாகிய சன்பல்லாத்து, நெகேமியாவிற்கு ஒரு கடித த்தை அனுப்பினான். அதிலே: நீரும் யூதரும் பெர்சிய ராஜாவிற்கு எதிராக கலகம்பண்ண நினைக்கின்ற படியால் நீர் அலங்கத்தைக் கட்டுகிறீர் என்றும், உம்மை நீர் யூதருக்கு ராஜாவாகப் போகிறீர் என்றும், யூதா விலே ஒரு ராஜா இருக்கிறார் என்று உம்மைக்குறித்து எருசலேமிலே கூறுகிற தீர்க்கதரிசிகளையும் சம்பாதித்தீரென்றும் புறஜாதிகளுக்குள்ளே பிரஸ்தாபமாயிருக்கிறது, இப்போதும் இந்தச் செய்தி ராஜாவுக்கு எட் டுமே. ஆகையால் நாம் ஒருவரோடொருவர் ஆலோசனைபண்ணுகிறத ற்காக நீர் வரவேண்டும் என்று எழுதியிருந்தது. பிரியவானவர்களே, இவ்விதமாகவே நாமும் தேவனுடைய வேலையிலே ஆர்வமாக ஈடுபட் டிருக்கும் போது, அதிகாரிகள் பிரபுக்கள் மத்தியிலே நம்மைக் குறித்தும் பொய்க் குற்றஞ்சாட்டுகளை சுமத்தும்படி எத்தனிக்கின்றவர்கள் ஆங் காங்கே தோன்றுவார்கள். நம் பிரயாசங்களை திசை திரும்பும்படிக்கும், நாம் மாம்சத்திலே செயற்பட்டு, நம் பெயரை நாம் பாதுகாக்கும்படி, மனித அறிவின்படி கிரியைகளை நடப்பிக்க வேண்டும் என்பதே அவர்க ளுடைய நோக்கமாக இருக்கின்றது. இதனால் நாம் கிறிஸ்துவின் சிந்தையிலிருந்து நம்மை திசை திருப்பிவிடுவதால் நாம் பாவ செய்து விடுவோம். இவ்வித்தமான குற்றச்சாட்டுக்கள் வரும் போது, தேவனை நம்மை பெலப்படுத்தி வழிநடத்தும்படிக்காய் அவரிடம் நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும். தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கின்ற ஆண்டவர் இயேசு நமக்காக வேண்டுதல் செய்கிறார். அவராலே நாம் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.

ஜெபம்:

பிதாவே, உலகத்திலிருப்பவனிலும் எங்களோடிருக்கின்ற நீர் பெரியவர், நீர் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? நீரே நம்மை உம்முடைய பாதையிலே வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 28:7